Vishnu vishal: கனா படத்துக்கு முன்னாடியே விஷ்ணு விஷால் கிட்ட கதை சொன்னேன்.. அருண்ராஜா காமராஜ் பளீச்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்த சிறப்பான கதைத்தேர்வால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார். வரும் 9ம் தேதி விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசான நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய விஷ்ணு விஷால் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து கோலிவுட்டில் தன்னை சிறப்பான நடிகராக நிலைநிறுத்தியுள்ளார். இவர் சினிமாவில் என்ட்ரியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய கேரியரில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளது சிறப்பானது என்றும் தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு, அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால்: நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணம் வெண்ணிலா கபடி குழு படத்தில் துவங்கியது. சுசீந்திரன் இயக்கத்தில் அவரது முதல் படமே சிறப்பாக கைக்கொடுத்தது. படத்தில் அவருக்கு சோகமான முடிவுதான் என்றால் இந்தப் படம் கொடுத்த உற்சாகம் மற்றும் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் சிறப்பாக அமைந்தது. இன்று நேற்று நாளை, ராட்சசன் முண்டாசுப்பட்டி, ஜீவா என அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்துள்ள விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து. இந்நிலையில் வரும் 9ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது.
லால் சலாம் படம்: சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளார் விஷ்ணு விஷால். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பேசியுள்ள அவர், நேற்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் தான் நடித்துள்ள மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற முதல் நாள் சூட்டிங்கில் அவரை பார்த்து தானும் விக்ராந்தும் அதிசயித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தன்னுடைய கதைத்தேர்வு குறித்து ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் கூறியுள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் விஷ்ணு விஷால் செயல்பட்டு வருகிறார்.

விஷ்ணு விஷால் -அருண்ராஜா காமராஜ் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. பேமிலி ஆக்ஷன் ஜானரில் இந்தப் படம் உருவாகவுள்ளது. பிரம்மாண்டமாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் துவங்கவுள்ளதாக அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படமான கனாவிற்கு முன்னதாகவே தான் விஷ்ணு விஷாலிடம் ஒரு கதையை சொல்லி அவரிடம் ஓகே வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது தங்களது கூட்டணி சரியான நேரத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குநர் கோகுல், ராம்குமார் செல்ல அய்யாவு உள்ளிட்டவர்களுடன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் கோகுல், செல்ல அய்யாவு இயக்கும் படங்களை அவரது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. நேற்றைய தினம் லால் சலாம் படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், அவரது கேரக்டர் அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











