விஷ்ணு விஷால் வீட்டில் விசேஷம்..என்ன குழந்தை பிறந்திருக்கு தெரியுமா?.. மனுஷன் செம ஹேப்பி

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் இரண்டு வானம், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் முதலில் ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரை பிரிந்த அவர் தற்போது ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் - ஜூவாலா தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படம் மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அதற்கு அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியானது. இதனால் அவரது கதை தேர்வு அபாரமாக இருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு எழுந்தது. குறிப்பாக சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை பாராட்டதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் மனம் தளராத விஷ்ணு விஷால் தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சூப்பர் ஹிட்டான இன்று நேற்று நாளை: பெரும் திருப்புமுனைக்காக காத்திருந்த அவருக்கு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்கள் அமைந்தன. இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து உற்சாகம் கூடிய விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாச வித்தியாசமாக நடித்தார்.இதனால் அவர் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறினார்.

Actor Vishnu Vishal Blessed With a Baby Girl

ராட்சசன்: விஷ்ணு விஷாலின் கரியரிலேயே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது ராட்சசன். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் த்ரில்லர் ஜானரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அவரது மேக்கிங்கும், விஷ்ணு விஷாலின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ராட்சசன் 2வை கொடுக்கப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியடைந்த லால் சலாம்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரஜினியின் கெஸ்ட் ரோல் என ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதுதான் என்று ஐஸ்வர்யா விளக்கமும் கொடுத்திருந்தார். அடுத்தாக விஷ்ணு விஷால் இரண்டு வானம் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

இரண்டு திருமணங்கள்: இதற்கிடையே அவர் ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் விஷ்ணுவும், ரஜினியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஸ்குவாஷ் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஷ்ணு விஷால்.இந்நிலையில் அவர்கள் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்திருக்கிறது.

மகள் பிறந்திருக்கிறாள்: அதாவது விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, 'எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். ஆர்யன் அண்ணன் ஆகிவிட்டான். இன்று எங்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள்.அதே நாளில் மகள் பிறந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தேவை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X