Vishnu Vishal: விஷ்ணு விஷாலை கொண்டாடிய லால் சலாம் டீம்.. எதுக்காக தெரியுமா?

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின்மூலம் சினிமாவில் நாயகனாக என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படம் அவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னை ரசிகர்களுக்கு பிடித்தமான ஹீரோவாக உயர்த்திக் கொண்டார். ஆரம்ப காலங்களில் துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. தொடர்ந்து ஜீவா படத்தில் கிரிக்கெட்டை மையமாக கொண்ட ஸ்கிரிப்டில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து நேற்று இன்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற படங்களும் இவரது ஹீரோ அந்தஸ்தை உயர்த்தியது. விஷ்ணு விஷால் கேரியரில் ராட்சசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டாகுஸ்தி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஷ்ணு விஷால் நடிப்பில் இன்னும் சில தினங்களில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்தின்பிரமோஷன்களும் சிறப்பான வகையில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது.

Actor Vishnu vishal completes 15 years in Cinema and Lal salaam team wishes

நடிகர் விஷ்ணு விஷால்: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியானது வெண்ணிலா கபடிக்குழு. இந்தப் படத்தின்மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் முன்னதாக கிரிக்கெட்டில் அதிகமான ஆர்வத்துடன் இருந்துள்ளார். இந்தப் படத்தில் கபடிப்போட்டியை விளையாடும் வீரராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெளியாகி தற்போது 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. விஷ்ணு விஷாலும் திரைத்துறையில் தனது 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் உற்சாகம்: இந்தக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும்வகையில் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடைய இந்த 15 ஆண்டு திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும் இனிமையாகவும் அமைந்ததில் தான் மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார். தனது திரை வாழ்க்கைக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்த தனது இயக்குநர் சுசீந்திரனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய படங்கள் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதில் தான் தெளிவாக உள்ளதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் லால் சலாம் படம்: தன்னுடைய திரைப்படங்கள் மக்களிடம் பாசிட்டிவ்வான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதில் தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த 15 ஆண்டுகால பயணத்தில் தான் இதுவரை நடித்துள்ள 20 படங்களில் பாதிக்கும் மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் என்பதே தனக்கு பெருமை என்று கூறியுள்ள விஷ்ணு விஷால், இந்த 15வது ஆண்டு தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் தற்போது தன்னுடைய லால் சலாம் படத்தில் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையை பகிர்ந்துக் கொள்வது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லால் சலாம் டீம் வாழ்த்து: இந்நிலையில் விஷ்ணு விஷாலின் இந்த 15 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும்வகையில் லால் சலாம் டீம் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து படத்தில் அவரது போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதில் அவர் கிரிக்கெட் உடையில் காணப்படுகிறார். அவரை சில நண்பர்கள் தூக்கி கொண்டாடுவதாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது. ஆனால் அவர் தீவிரமாக எதையோ பார்ப்பதைபோல அந்த போஸ்டரில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X