Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நடிகர், தயாரிப்பாளரா சக்சஸ் காட்டியாச்சு... பாடகராவும் மாறியாச்சு... விஷ்ணு விஷால் அதிரடி
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள எஃப்ஐஆர் படம் வெளியாகி அதிரடியை கிளப்பி வருகிறது.
படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வெற்றி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்தப் படத்திற்கான டைட்டில் பாடலை பாடியுள்ளார் நடிகர் சிம்பு.
நோ
Valentine's
day...ஒன்லி
அரபிக்குத்து
டே...
ட்விட்டரை
மிரள
வைத்த
ரசிகர்கள்

நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். ஜீவா உள்ளிட்ட படங்கள் இவருக்கு கைக்கொடுத்தது.

கேரியர் பெஸ்ட் படம்
ஆயினும் விஷ்ணு விஷாலின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்த படம் என்றால் ராட்சசன் படத்தை சொல்லலாம். இந்தப்படம் விஷ்ணு விஷாலின் வித்தியாசமான நடிப்பையும் அவரது தீவிரத்தையும் வெளிக் கொண்டு வந்தது. சைக்கோ த்ரில்லராக வெளியான அந்தப் படம் அவருக்கு எவர்கிரீன் சக்சஸை கொடுத்தது.

அதிகமான பொறுப்பு
இதையடுத்து தனக்கு சிறப்பான படத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதை சார்ந்தே தற்போது எஃப்ஐஆர் படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததாகவும் அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த எஃப்ஐஆர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது எஃப்ஐஆர் படம். இந்தப் படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலதரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சிம்பு பாடிய தீம் பாடல்
இந்தப் படத்தின் தீம் பாடலை நடிகர் சிம்பு பாடிக் கொடுத்திருந்தார். அந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக ராட்சசன் படத்திற்கும் இதேபோல தீம் பாடல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிம்பு பாடிய பாடலின் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

விஷ்ணு விஷால் பாட்டு
இந்நிலையில் படத்தில் விஷ்ணு விஷாலும் ஒரு பாடலை பாடியுள்ளார். யா அல்லாஹ் என்ற அந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் சுகந்த் சேகர் ஆகியோருடன் இணைந்து விஷ்ணு விஷால் பாடியுள்ளார். அஷ்வத் இசையில் இந்தப் பாடல் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. இதன் மூலம் விஷ்ணு பாடகராகவும் மாறியுள்ளார்.