ஊரடங்கில் அப்பாவிற்கு முடிவெட்டிய பிரபல நடிகர்.. டிரெண்டிங் பிக்ஸ் !

சென்னை : நடிகர் விஷ்ணுவிஷால் தனது அப்பாவிற்கு முடிவெட்ட கையில் கத்திரிக்கோல்களுடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Vishnu Vishal latest video | பயமா இருக்கு | Chennai Police

தமிழ் திரைப்படத்துறையில் இளம் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் காடான் மற்றும் எஃப் ஐ ஆர் போன்ற பல படங்களில் நடித்து வரும் நிலையில் தன்னுடைய சிக்ஸ் பேக் கட்டுடலுடன் இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ரசிக்க வைத்து

ரசிக்க வைத்து

இந்த நிலையில் இவர் குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்கவும் வைத்து வந்தார்.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

விஷ்ணு விஷால் 2011ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஜினி நடராஜ் பிரபல நடிகரும் மற்றும் இயக்குனருமான கே நட்ராஜ்-ன் மகளாவார். இவர் ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், லிங்கா ராணுவவீரன், நான் மகான் அல்ல போன்ற படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், நிறைய படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்துள்ளார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இவ்வாறு நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடியின் திருமண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. இந்நிலையில் இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மண வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான நிகழ்வுகளால் 2018ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி சுமூகமாக பிரிந்து சென்றனர்.

அதிலிருந்து மீண்டு

அதிலிருந்து மீண்டு

மனைவி பிரிந்து சென்ற மன அழுத்தத்தில் இருந்த விஷ்ணுவிஷால் குடிப்பழக்கம் போதைக்கு அடிமையாகி சில ஆண்டுகளாக படங்களில் ஏதும் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் மன அழுத்தத்தின் காரணமாக தான் வெகு நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வந்ததாகவும் தற்போது அதிலிருந்து மீண்டு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருவதாகவும் சொல்லி அனைரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அது மட்டுமல்லாமல் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டேன் என தனது சிக்ஸ் பேக் உடல்கட்டுடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதோடு, இவரின் காடான் மற்றும் எஃப் ஐ ஆர் போன்ற படங்கள் இவர் மீண்டு வந்ததற்கு அடித்தளமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கத்திரிக்கோல்

கத்திரிக்கோல்

இந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தனது அப்பாவிற்கு முடிவெட்ட கையில் கத்திரிக்கோல்களுடன் போஸ் கொடுத்து தனது தந்தைக்கு சிறப்பாக முடிதிருத்தம் செய்து மகிழ்ந்துள்ளார்.

பலரும் கலாய்த்து

பலரும் கலாய்த்து

இவரது அப்பாவிற்கு இந்த லாக்டவுன் சமயத்தில் முடிதிருத்தம் செய்து அழகு படுத்தியதை பார்த்து விஷ்ணு விஷாலுக்கு பலரும் பாராட்டுக்கள் சொல்லி வரும் நிலையில் பலரும் இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே என முடி திருத்தம் செய்தும் செய்யாதது போல இருப்பதாக பலரும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X