போலீஸ் உடையில் விஷ்ணு விஷால் கெத்து .. சிறுவயது போட்டோவை பதிவிட்டார்!

சென்னை : போலீஸ் உடையில் இருக்கும் தனது பழைய போட்டோவை வெளியிட்டார் விஷ்ணு விஷால்.

Recommended Video

Exclusive! Selvaraghavan Fan Boy moment | Vishnu Vishal about Simbhu

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் உள்ளனர். அதில் பலருக்கு தங்களின் ஆசை நடிப்பதாகத்தான் இருந்திருக்கும். சிலர் வேறு துறைகளில் இருந்தும் வருவார்கள், அப்படிப்பட்ட சிலரில் ஒருவர் தான் விஷ்ணு விஷால்.தனது கிரிக்கெட் கனவையும் தாண்டி அவருக்கு சினிமா பெரிய தொழிலாகிவிட்டது.

Actor vishnu vishal shares a childhood photo

ஆரம்ப காலங்களில் கிரிக்கெட்தான் வாழ்க்கை என்றிருந்த இவர் காலில் அடிப்பட்ட காரணத்தால் தன் கிரிக்கெட் கனவை முடித்துக்கொண்டு, வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பலே பாண்டி, துரோகி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

பின் குள்ளநரி கூட்டம்,முண்டாசுபட்டி போன்ற காமெடி படங்கள் பல நடித்தார்.
அதன் பின் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் விஷ்ணு விஷால். அதன் பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தார்.

Actor vishnu vishal shares a childhood photo

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, அதன் பின்னர் ராட்சசன் என்ற வெற்றி முத்திரை பதித்தார்.தற்போது லாகடவுன் நேரத்தில் பல பிரபலங்கள் தங்களின் சிறுவயது போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையில் விஷ்ணு விஷால் தன் சிறுவயது புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Actor vishnu vishal shares a childhood photo

அதில் அவர் தன் தந்தையுடன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு போலீஸ் உடையில் போஸ் கொடுக்கிறார். அவரின் தந்தை தற்போது காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டோவின் மேல் பல வருடங்களுக்கு முன் என் போலீஸ் தந்தையுடன் விளையாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X