Vishnu Vishal: இன்று நேற்று நாளை 2 படத்திற்காக வெயிட்டிங்.. விஷ்ணு விஷாலின் ஆசைய பாருங்க!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன்களை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை அளித்து வருகிறார். படம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்தும் தன்னுடைய மற்ற படங்கள் குறித்தும் அவர் பல்வேறு சுவாரஸ்யங்களை கொடுத்து வருகிறார். தன்னுடைய மற்ற படங்களின் ரிலீசின்போது தனக்கு எப்போதும் பதற்றம் இருக்கும் என்றும் ஆனால் லால் சலாம் படம் குறித்த எந்தவிதமான பதற்றமும் இல்லை என்றும் ரசிகர்களுடன் இணைந்து தானும் ரிலாக்ஸாக படத்தை திரையரங்கில் பார்க்க விரும்புவதாகவும் அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

Actor Vishnu vishal speaks that he is eagerly waiting for Indru Netru Naalai 2 movie

நடிகர் விஷ்ணு விஷால்: நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இவரது ராட்சசன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை. இவரது நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

லால் சலாம் படம்: முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் மூன்றாவது படமாக ரிலீசாகவுள்ளது லால் சலாம். படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கடந்த வாரத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்தனர். படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளது.

விஷ்ணு விஷால் பேட்டி: இந்தப் படத்தின் பிரமோஷன்களை முன்னிட்டு, நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். லால் சலாம் படம் குறித்தும், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினி குறித்தும் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார். முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை படத்தின் 2வது பாகம் குறித்து பேசிய அவர், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், தொடர்ந்து தள்ளிப் போவதாகவும் இந்தப் படத்திற்காக தானும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனிடையே தனக்கு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்: விஷ்ணு விஷால் நடிப்பில் தொடர்ந்து ஜகஜால கில்லாடி, மோகன்தாஸ் ஆகிய படங்கள் ரிலீசாகாமல் உள்ள நிலையில் இவை குறித்தும் விஷ்ணு விஷால், ஜகஜால கில்லாடி படம் தயாரிப்பாளரின் நிதிநிலை காரணமாக வெளியாகாமல் உள்ளதாகவும் மோகன்தாஸ் படம் முன்னதாக ஓடிடிக்காக உருவாக்கப்பட்டு அதன் எடிட்டிங்கும் நிறைவான நிலையில் அதை நேரடியாக வெளியிட முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது இந்தப் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும் வகையில் எடிட்டிங் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X