Vishnu vishal: ராட்சசன் கூட்டணியில் உருவாகிவரும் படம்.. விஷ்ணு விஷால் சொன்னத பாருங்க!

சென்னை: வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது திரைப்பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து நல்ல கதைக்களங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணையும் வாய்ப்பினை இவர் பெற்றார். விஷ்ணு விஷாலின் அடுத்தடுத்த வெற்றி படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான பட வாய்ப்புகளையும் பெற வைத்தது. இவரது நடிப்பில் முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் என சிறப்பான பல படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தன.

இதனிடையே கடந்த 9ம் தேதி இவரது நடிப்பில் லால்சலாம் படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்திருந்தார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆயினும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியதாக முன்னதாக விஷ்ணு விஷால் பேட்டியொன்றில் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். கிரிக்கெட் வீரராக விரும்பிய விஷ்ணு விஷாலுக்கு சினிமா கேரியராக மாறியுள்ளது. ஆயினும் அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்பான படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

Actor Vishnu vishal updates about his VV21 movie with Director Ram kumar

நடிகர் விஷ்ணு விஷால்: நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் அவருக்கு சோகமான முடிவை கொடுத்திருந்த போதிலும் அவருடைய கேரியரில் மிகச் சிறப்பான அறிமுகத்தை கொடுத்திருந்தது. படத்தில் கபடி போட்டியாளராக நடித்திருந்தார் விஷ்ணு விஷால். முதல் படத்திலேயே அவர் தன்னுடைய மிக சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் என சிறப்பான பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த வாய்ப்பினை எல்லாம் அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் தன்னுடைய முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

லால் சலாம் படம்: கடந்த 9ம் தேதி ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியானது. அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் லீட் கேரக்டர்களின் நடித்திருந்தனர். படத்தில் செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் விஷ்ணு விஷாலுக்கு சிறப்பான பெயரை பெற்று தந்துள்ளது. முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் அவர் இயக்குனர் ராம்குமாருடன் இணைந்து நடித்திருந்தார்.

விஷ்ணு விஷால் -ராம்குமார் கூட்டணி: இந்த படம் விஷ்ணு விஷால் கேரியரில் மிக சிறப்பான பெயரை பெற்று தந்தது. முன்னதாக இந்த கூட்டணியில் முண்டாசுப்பட்டி படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராட்சசன் படத்தை தொடர்ந்து தனுசை வைத்து ராம்குமார் படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் தாமதமானதால் மீண்டும் விஷ்ணு விஷால் லீட் கேரக்டரில் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார். VV21 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் இரண்டுகட்ட சூட்டிங்குகள் நிரைவடைந்துள்ளதாகவும் தற்போது மூன்றாவது கட்ட சூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருவதாகவும் தற்போது விஷ்ணு விஷால் அப்டேட் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் அவர் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த கூட்டணியில் வெளியான இரு படங்களும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள இந்த மூன்றாவது படமும் மாஸாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார். விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X