கட்டுக்கோப்பான உடல்.. விஷ்ணு விஷால் ஒர்க் அவுட்.. தம்பியை முதுகில் ஏற்றி சாகசம் !
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
Recommended Video
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் ஒரு நெக்ஸ்ட் டோர் பாயாக நடித்து கொண்டிருந்தவர். மிக சாதாரண உடலமைப்பு எளிமையான தோற்றம் என மிகவும் எதார்த்தமான நடிகராக வலம் வந்த நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மிக்க வைக்கும் ஒரு மாறுதலை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

பல மாதங்கள் கடுமையான உழைப்புக்கு பிறகு சிக்ஸ் பேக் ஏற்றிய விஷ்ணு விஷால் அதை மிக சந்தோஷத்துடன் ரசிகர்களுக்கு பகிர்ந்தார். இதை ஒரு அறிக்கையாக கூறிய விஷ்ணு விஷால் தன் வாழ்வில் நடந்த சில சோகமான விஷயங்கள் தன்னை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி விட்டதாகவும் அதில் இருந்து மீள தற்போது உடற்பயிற்சியில் முழு கவனம் செலுத்தி தன் உடலழகை மாற்றியிருப்பதாக கூறினார்.
இந்த நேரத்தில் வெளிவந்த எப்.ஐ.ஆர் படத்தின் போஸ்டர் ஒன்றிலும் விஷ்ணு விஷால் சிக்ஸ் பேக்குடன் சங்கிலியில் தொங்கிய படி இருந்தார். இந்த இடத்தில் ரசிகர்கள் விஷ்ணு விஷாலை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
அப்போதிலிருந்து சரியான உடல்கட்டுபாட்டை அப்படியே பின்பற்றி வந்த விஷ்ணு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பினால் அறிவிக்கபட்ட லாக்டவுனிலும் மாறவில்லை தினந்தோறும் தன்னால் முடிந்த கடின உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

இதை தான் மட்டும் செய்வதில்லாமல் தன் ரசிகர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் தான் செய்யும் உடற்பயிற்சிகளை வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களையும் ஊக்கபடுத்தி வந்தார். இதன் வாயிலாக தற்போது ஒரு காணொளியை பதிவேற்றியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் பிளான்க் எனும் வயிற்றுக்கான உடற்பயிற்சியை வித்தியாசமான முயற்சியில் செய்துள்ளார் .

இதில் பிளான்க் எனும் உடற்பயிற்சியை விஷ்ணு மேற்கொள்ளும் போது அவரது உறவுக்கார தம்பி ஒருவர் நீட்டமாக படுத்திருக்கும் விஷ்ணுவின் மீது ஏறி யோகா செய்கிறார். அந்த தம்பி எப்படியும் 70கிலோவிற்கும் மேல் இருப்பார் போல. அவரின் உடல் எடையையும் தாங்கி உடற்பயிற்சி செய்கிறார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது விஷ்ணு விஷாலின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஷ்ணு விஷாலின் உடற்பயிற்சி ஆர்வத்தை பல பிரபலங்களும் கூட பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications