செல்லங்கள் எல்லாம் போச்சு: வர்தாவுடன் போருக்கு கிளம்பிய நடிகர் விவேக்
சென்னை: பெரும் ஆல மரங்களையே பிடிங்கி எறிந்திருக்கும் வார்தா! உன்னோடு எனக்கு "war"(போர்)தான் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. வர்தா புயல் சென்னையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுவிட்டது.

புயல் கரையை கடந்தபோது வீசிய பேய்க்காற்றால் சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.
இன்று இரவுக்குள் சென்னை நகரில் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மரக்கன்றுகளை விரும்பி நட்டு வரும் விவேக் மரங்கள் விழுந்துள்ளதை பார்த்து கவலை அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பெரும் ஆல மரங்களையே பிடிங்கி எறிந்திருக்கும் வார்தா! உன்னோடு எனக்கு "war"தான். பசுமையை மீட்பது எப்படி என அரசிடம் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











