Actor Yash: யாஷ் படத்தை இயக்கும் கீது மோகன்தாஸ்.. சூட்டிங் அப்டேட் இதோ!
பெங்களூர்: கேஜிஎப் படங்களில் நடித்ததன்மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார் நடிகர் யாஷ்.
இந்தப் படத்தை அடுத்து பல மாதங்களாக தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மேற்கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்படமான யாஷ்19 படம் குறித்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
நடிகர் யாஷ்: நடிகர் யாஷ் கன்னட மொழியில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார். முன்னதாக பல படங்களில் நடித்துள்ள போதிலும் அவருக்கு கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாவது பாகங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இந்தப் படங்களில் நடித்துள்ள யாஷ், சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அப்டேட்டை அவர் கடந்த சில மாதங்களாகவே அறிவிக்காமல் உள்ளார்.
யாஷ்19 படம்: அவரது யாஷ்19 படம் குறித்து பல யூகங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியானவண்ணம் இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்டபொழுது ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாசுடன் யாஷ் தனது அடுத்தப்படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்தப்படம் குறித்து யாஷ்: ரசிகர்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தில் படங்களை பார்த்து வருவதால், அவர்களுக்கு சிறப்பான படத்தை கொடுக்க தான் உழைத்து வருவதாகவும் யாஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது தன்னுடைய பொறுப்பு என்றும் அதை நிறைவேற்றுவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் இணையவுள்ளதாகவும் இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாஷ்19 பட அப்டேட்: இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் துவக்கத்தில் துவங்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய விருது பெற்ற கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் இணையவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அழுத்தமான கேரக்டரில் யாஷ் நடிக்கவுள்ளதாகவும் தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஜரூராக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேஜிஎப் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு: முன்னதாக யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்களில் ராக்கி பாய் என்ற கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்தார் யாஷ். இந்தப் படம் அவருடைய கேரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படமும் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கும் யாஷ், தற்போது கீது மோகன்தாசுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மேலும் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











