நடிகர் நடிகைகள் உற்சாக புத்தாண்டு கொண்டாட்டம் - வீட்டில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்திய ரஜினி!

ரஜினி சந்திப்பு
தனது போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ரஜினிக்கு பெரிய பெரிய காலண்டர்களை அச்சடித்து பரிசளிக்கக் கொண்டு வந்திருந்தனர். அவற்றை நேரில் வந்து பெற்றுக் கொண்ட ரஜினி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
முதல் முறை...
புத்தாண்டு அன்று வழக்கமாக ரஜினி வீட்டுக்கு வரும் ரசிகர்களுக்கு லதா ரஜினி இனிப்பு வழங்குவது வழக்கம். இந்த முறை ரஜினியே வந்து ரசிகர்களைச் சந்தித்தது, இன்ப அதிர்ச்சியைத் தந்தது.
நடிகைகள்
நடிகைகள் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நயன்தாரா
நயன்தாரா மட்டும் துபாயில் கொண்டாடினார். அவர் கிறிஸ்துமஸ் தினத்தின்போதே துபாய் போய்விட்டார். அங்குதான் நயன்தாராவின் அண்ணன் வசித்து வருகிறார். முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக துபாய் சென்ற அவர் புத்தாண்டையும் அண்ணன் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இது குறித்து நயன்தாரா கூறுகையில், "கடந்த 2012-ம் ஆண்டு நன்றாக அமைந்தது. நல்ல படங்களில் நடித்தேன். ஆந்திர அரசின் நந்தி விருதும் கிடைத்தது. அதைப் போல் இந்த வருடமும் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











