படத்திற்காக மொட்டை பாஸான கமல், அஜீத்

By Siva

சென்னை: கோலிவுட் நடிகர்களில் படத்திற்காக மொட்டை அடித்தவர்களைப் பற்றி பார்ப்போம்.

நடிகர், நடிகைககள் படத்திற்கு என்று தங்களது லுக்கை மாற்ற மெனக்கெடுகிறார்கள். இப்படி படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதற்கு பெயர் போனவர் உலக நாயகன் கமல் ஹாஸன்.

அவரை அடுத்து சீயான் விக்ரமும் லுக்கிற்காக மெனக்கெடுவார். இந்நிலையில் படத்திற்காக தங்கள் ஸ்டைலானா முடியை இழந்து மொட்டை பாஸான ஹீரோக்களில் சிலரைப் பார்ப்போம்.

கமல்

கமல்

கமல் ஹாஸனின் ஹேர்ஸ்டைலை காலம் காலமாக பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அவர் ஆளவந்தான் படத்திற்காக மொட்டை அடித்தாார்.

விக்ரம்

விக்ரம்

சீயான் விக்ரம் சேது படத்திற்காக மொட்டை அடித்தார். உடல் எடையை படத்திற்கு படம் ஏற்றியும், இறக்குவதுமாக உள்ளார். தற்போது அவர் நடித்து வரும் ஐ படத்திற்காக ஒல்லிக்குச்சியாக ஆகியுள்ளார்.

அஜீத்

அஜீத்

ரெட் படத்திற்காக அஜீத் மொட்டை பாஸாக ஆனார். அந்த கெட்டப்பும் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சூர்யா

சூர்யா

சூர்யா கஜினி படத்திற்காக உடம்பை கும்மென்று ஏற்றி மொட்டை அடித்தார். கஜினியை மறக்க முடியுமா? மேலும் நந்தா படத்தில் மொட்டையடித்து முடிவளர்ந்த கெட்டப்பில் வந்தார். விக்ரமை போன்று சூர்யாவும் உடல் எடையை ஏற்றி, இறக்குவதில் வல்லவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X