twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்கள் மிரட்டல்: பம்மும் தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகையரின் சம்பளம் தொடர்பாக அவர்களுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. சம்பளப் பிரச்சினை தொடர்பாகநடிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பம்மியுள்ளது.சமீபத்தில் சென்னையில் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர், நடிகையருக்கு இனிமேல் சம்பளம் மொத்தமாக வழங்கப்படமாட்டாது. 70 சதவீத சம்பளம் முதலிலும், 30 சதவீத பாக்கி சம்பளம், படம் முடிவடைந்து வெளியான பிறகும் தரப்படும் எனதயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.இதுதவிர கேரவன் வேன் கேட்கக் கூடாது, கூடவே கும்பலைக் கூட்டி வந்து தயாரிப்பாளர் தலையில் செலவை ஏற்றக் கூடாது என்பனபோன்ற மேலும் பல கட்டுப்பாடுகளையும் நடிகர், நடிகையருக்கு அவர்கள் விதித்தனர்.தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்பு நடிகர்களை கடுப்பேற்றியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நடிகர், நடிகைகள் தயாராவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் தரப்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளது.தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் ஏ.எல்.அழகப்பன் விடுத்துள்ள அறிக்கையில்,சம்பளப் பிரச்சினை தொடர்பாக நடிகர் சங்கத்திலிருந்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அவர்கள் ரகசியக் கூட்டமும்போடவில்லை. நாங்கள் அவர்களுடன் மோத விரும்பவில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைநடந்து வருகிறது.பிரச்சினை சுமூகமாகத் தீரும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

    By Staff
    |

    நடிகர், நடிகையரின் சம்பளம் தொடர்பாக அவர்களுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. சம்பளப் பிரச்சினை தொடர்பாகநடிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பம்மியுள்ளது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர், நடிகையருக்கு இனிமேல் சம்பளம் மொத்தமாக வழங்கப்படமாட்டாது. 70 சதவீத சம்பளம் முதலிலும், 30 சதவீத பாக்கி சம்பளம், படம் முடிவடைந்து வெளியான பிறகும் தரப்படும் எனதயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

    இதுதவிர கேரவன் வேன் கேட்கக் கூடாது, கூடவே கும்பலைக் கூட்டி வந்து தயாரிப்பாளர் தலையில் செலவை ஏற்றக் கூடாது என்பனபோன்ற மேலும் பல கட்டுப்பாடுகளையும் நடிகர், நடிகையருக்கு அவர்கள் விதித்தனர்.

    தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்பு நடிகர்களை கடுப்பேற்றியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நடிகர், நடிகைகள் தயாராவதாக தகவல்கள் வந்தன.


    இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் தரப்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளது.

    தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் ஏ.எல்.அழகப்பன் விடுத்துள்ள அறிக்கையில்,

    சம்பளப் பிரச்சினை தொடர்பாக நடிகர் சங்கத்திலிருந்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அவர்கள் ரகசியக் கூட்டமும்போடவில்லை. நாங்கள் அவர்களுடன் மோத விரும்பவில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைநடந்து வருகிறது.

    பிரச்சினை சுமூகமாகத் தீரும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X