Ajith - ரசிகருக்கு ஓங்கி அறைவிட்ட அஜித்குமார்.. ஆத்தாடி பெரிய கோபக்காரரா இருக்காரே

சென்னை: நடிகர் அஜித் குமார் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். விஜய் இப்போது அரசியலுக்கு செல்லவிருப்பதால் அடுத்ததாக அஜித் கோலிவுட்டை ரூல் செய்வார் என்று ஏகே ரசிகர்கள் கூறுகின்றனர். அவர் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை மகிழ் திருமேனி இயக்கிவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்துக்கான பூஜையும் போடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான் அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Actress Aarthi Talks about Ajiths Unknown Side

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஜோராக நடந்து முடிந்தது. அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்து தற்போது அடுத்த லொக்கேஷன் தேடும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். துணிவு படம் கொடுத்த ஹிட் வைபை கண்டிப்பாக அஜித்குமார் இந்தப் படத்திலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

ஒதுங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலை படத்தில் நடிப்பது மட்டும்தான். அதை தவிர்த்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஈடுபடுவதில்லை. கடைசியாக அவர் அசல் படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தி ஷேரிங்ஸ்: இந்நிலையில் நடிகை ஆர்த்தி அஜித் குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "அஜித் சாரின் ஒரு படத்துடைய ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அவரது ரசிகர் ஒருவர் தனது தலையில் 'தல' என்று முடியை கட் செய்து வந்திருந்தார். அவ்வளவு கூட்டத்திலும் அதனை அஜித் கவனித்துவிட்டார். பிறகு காவல் துறையினரிடம் சொல்லி அந்த ரசிகரை தன்னிடம் அழைத்துவர சொன்னார் அஜித்.

பளார் விட்ட அஜித்: அந்த ரசிகர் அருகே வந்ததும் அவரது கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைவிட்டார். அதோடு நில்லாமல் அந்த ரசிகருடன் தனது உதவியாளரை அனுப்பி மொட்டை அடிக்க வைத்தார். அந்த ரசிகரும் மொட்டை அடித்துவிட்டு அஜித்தை பார்க்க வந்தார். அப்போது எதுவும் சொல்லாமல் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, நீ தல என்று முடியை கட் செய்ததை உனது பெற்றோர்கள் சந்தோஷப்படமாட்டார்கள். உங்களுடைய அன்பு இதயத்தில் இருந்தால் போதும் என சாஃப்ட்டாக பேசி அனுப்பிவைத்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X