விஜயகாந்த் மகனுக்கு விஜய் செந்தூரபாண்டியா வரணும்.. அஞ்சலி செலுத்திய பிரபல நடிகை பளிச் பேட்டி!
சென்னை: விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா விஜய்காந்த் மகன் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடித்து வெற்றியை கொடுக்க வேண்டும் என பேசியுள்ளார். கடந்த டிசம்பர் மாத இறுதியில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து சினிமா பிரபலங்களும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை அம்பிகா வந்து அஞ்சலி செலுத்தி சென்ற நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தளபதி விஜய் விஜயகாந்த் மகனுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அரசியலில் மூத்த மகன்: விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தேமுதிக கட்சியை அம்மா பிரேமலதாவுடன் இணைந்து வளர்க்க பாடுபட்டு கொண்டிருக்கிறார். அப்பாவிடம் தான் கடைசியாக சொன்ன உறுதிமொழியை இப்போ சொல்ல மாட்டேன். விரைவில் உங்க எல்லாருக்கும் தெரியும்படி செய்வேன் என நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியலில் அப்பாவை போல பெரிய ஆளுமையாக வருவேன் என்பது குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.
சினிமாவில் சண்முக பாண்டியன்: 2015ம் ஆண்டு தனது இளைய மகன் சண்முக பாண்டியனை சகாப்தம் படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த். அந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவே இல்லை. அதன் பின்னர் சமுத்திரகனியுடன் இணைந்து 2018ல் மதுரை வீரன் படத்தில் நடித்தார் அந்த படமும் பெரிதாக போகவில்லை. அடுத்து படைவீரன் படத்தில் நடித்துள்ள சண்முக பாண்டியன் அந்த படத்தை ரிலீஸ் செய்ய பல மாதங்களாக போராடி வருகிறார்.

ராகவா லாரன்ஸ், விஷால் அறிவிப்பு: விஜயகாந்த் மறைந்த நிலையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் அல்லது டபுள் ஹீரோ சப்ஜெட்டாக இருந்தால் இணைந்து நடிக்க ரெடி என ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் உள்ளிட்ட நடிகர்கள் உறுதியளித்துள்ளனர்.
செந்தூரபாண்டியா விஜய் வரணும்: இந்நிலையில், விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா விஜய்க்கு எப்படி விஜயகாந்த் செந்தூரபாண்டியா வந்து உதவி செஞ்சாரோ அதே போல சண்முக பாண்டியனுக்கு விஜய் செந்தூரப்பாண்டியா வந்து உதவி செய்யணும் என நடிகை அம்பிகா தனது கோரிக்கையை வைத்திருக்கிறார்.
விஜய் அப்பா சந்தோஷப்படுவார்: நடிகர் விஜய் சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்தால் அதை பார்த்து விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் முதல் ஆளாக சந்தோஷப்படுவார். மறைந்த நம்முடைய கேப்டன் விஜயகாந்த் ஆன்மாவும் மகிழ்ச்சியடையும் என அம்பிகா பேசியுள்ளார். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் பெரியாளாக சாதிக்க எந்த பிரபல நடிகர் முதலில் உதவி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











