இவங்கள எப்படி சமாளிக்கிறீங்க.. நடிகையிடம் கண்ணாலேயே பேசிய விஜய்.. செம விஷயம்
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவரும் விஜய்; இந்தப் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இனிமேல் அவரை திரையில் பார்க்க முடியாது என்ற சோகம் அவரது ரசிகர்களுக்கு இருந்தாலும் அரசியல் களத்தில் பார்க்கலாம் என்ற சந்தோஷம் அவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் விஜய் குறித்து நடிகை அதுல்யா ரவி பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருந்த GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு, பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெறவில்லை. எனவே அந்த இரண்டு படங்களில் விட்டதை கோட் படத்தில் விஜய் பிடித்துவிடுவார் என்றே அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி படம் சுத்தமாக அமையவில்லை.
ஜன நாயகன்: அந்தப் படத்தை முடித்த அவர் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். முதன்முறையாக வினோத்துடன் விஜய் சேர்ந்திருப்பதால் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது தளபதி ரசிகர்களிடம்.

என்ன கதை?: முதலில் இந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதனை வினோத் ஒரு நிகழ்ச்சியில் மறுத்துவிட்டார். அதனையடுத்து இது பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் ஒரு தகவல் ஓடியது. பிறகு அதுவும் இல்லை என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் இதில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றே தெரிகிறது. அவர் காவல் சீருடையில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
ஹிட்டாகுமா?: வினோத் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் மிக மிக முக்கியமானவர். அவர் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு படங்களுமே மிகச்சிறந்த படங்களாக அமைந்தன. அதேசமயம் அஜித்துடன் அவர் பணியாற்றிய மூன்று படங்களுமே பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அதற்கு அஜித்தின் தலையிடல்தான் காரணம் என பேசப்பட்டது. எனவே ஜன நாயகன் படத்திலும் வினோத்தை அவர் ஸ்டைலில் ஒர்க் செய்ய விடாமல் தடுத்தால் அஜித் - வினோத் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்தக் கூட்டணிக்கும் ஏற்படும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
அதுல்யா ரவி பேட்டி: இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ஷூட்டிங் நடந்த செட்டுக்கு பக்கத்தில்தான் GOAT படத்தின் ஷூட்டிங்கும் நடந்தது. அப்போது விஜய்யை பார்க்க நான், வைபவ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் சென்றிருந்தோம். அங்கு வைத்து என்னை பார்த்த அவர், இவங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க என கண்களாலேயே கேட்டார். நான் அவ்வளவுதான். இதுக்கு மேலே என்ன வேண்டும்" என்றார்.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்: முன்னதாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தில் வைபவ், அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றன. இதனை விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். காமெடி ஜானரில் உருவாகும் இப்படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











