Actor Suriya: சூர்யாவுடன் இணையும் ஜான்வி கபூர்.. என்ன படம் தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள படம் சூர்யா 43. இந்தப் படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு தற்காலிகமாகத்தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டிலில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் சூர்யா அடுத்ததாக பாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில்தான் சூர்யா பாலிவுட் படத்தில் நேரடியாக களமிறங்கவுள்ளார். மிக அதிகமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. மகாபாரத கால கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடி சேரவுள்ள நடிகை குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்துவரும் சூழலில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில், மற்ற மொழிகளின் திரையரங்குகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டு கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி முடிவெடுக்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கங்குவா படம்: படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகின்றன. படத்தின் வில்லனாக அதிரடி காட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சூர்யா கமிட்டாகியுள்ளார். அடுத்ததாக அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள புறநானூறு படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இநதப் படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.
பாலிவுட்டில் சூர்யா என்ட்ரி: இந்நிலையில் நேரடி பாலிவுட் படத்தில் சூர்யா இணையவுள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கவுள்ளார். படம் மகாபாரத கதைரயை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் வேலைகளை படக்குழுவினர் முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சூர்யாவிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்: அதன்படி படத்தில் சூர்யாவின் ஜோடியாக பிரபல நடிகை மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஜான்வி கபூரை தமிழிலும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சூர்யா ஜோடியாக அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கர்ணா படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











