கேமரா முன் முகமூடியுடன் இருக்கும் நடிகர்கள்.. எல்லாமே பாசாங்குத்தனம்.. நடிகை மாளவிகா பளிச்!

சென்னை: பெண்ணியவாதியாகவும், பெண்களை மதிப்பவராகவும் கேமிராவிற்கு முன் பாசாங்குத்தனம் செய்யும் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிராவிற்கு பின் பெண்களை வெறுக்கும் நபராக மாறுவதை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் என்று, வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா மோகன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திரைப்படத் துறையில் ஆண் என்றால் ஒரு மாதிரியும், பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்க்கும் போக்கு ஆழமாக வேரூன்றி விட்டது, இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை. ஆண்கள் உண்மையிலேயே புத்திசாலிகளாகிவிட்டார்கள் என்றும் நான் நினைக்கிறேன், இந்த போக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் நிறைய ஆண் நடிகர்களிடம் பார்த்திருக்கிறேன், அவர்கள் அணிந்து இருக்கும் முகமூடியை எப்படி அணிய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். சினிமாவில் பெண்களை சில நடிகர்கள் மதிப்பவர்கள் போல காட்டிக்கொள்வார்கள், அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து கொண்டு நல்ல பெயர் எடுத்து விடுவார்கள்.

Malavika Mohanan interview

பாசாங்குத்தனம்: ஒரு பெண்ணியவாதியாக, மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட நபராக, பெண்களை சமமாக நடத்தும் ஒருவராக கேமிராவிற்கு முன் இருப்பார்கள். ஆனால், கேமிராவிற்கு பின், பொதுமக்களிடமிருந்து விலகி, இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களை வெறுக்கும் நபராக மாறுவதை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். எதற்கு இந்த பாசாங்குத்தனம் என்று நடிகை மாளவிகா மோகனன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

கைவசம் உள்ள படம்: நடிகை மாளவிகா மோகனன் கடந்த ஆண்டு தமிழில், பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை கதைகள் வழியே கற்பனை கலந்து ஃபேன்டசி கதையாக கொடுத்து இருந்தார் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறை, நில அரசியலையும் சேர்ந்து ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட 'தங்கலான்' படம் ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமான பதிவாக இருந்தது. இதில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மாளவிகா. இந்த படத்தை தொடர்ந்து, இந்தி யுத்ரா படத்தில் நடித்தார்.அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தெலுங்கு திரைப்படமான தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடன் ஜோடியாக கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில், நிதி அகர்வால், ரித்தி குமார், சிறப்பு தோற்றத்தில் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் மலையாளத்தில் ஹிருதயபூர்வம் படத்திலும், தமிழில் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் மோகனின் மகளான மாளவிகா, 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போலே' படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த இவர், விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாஸ்டர் படத்திலும், விக்ரமுன் தங்கலான் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: malavika mohanan interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X