அஜித் ரொம்பவே மாறிட்டாரு.. காரணம் அந்த விஷயம்தான்.. ஓபனாக பேசிய நடிகை
சென்னை: துணிவு படத்தில் நடித்து முடித்த அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் நடக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படமானது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை மந்த்ரா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வரிசையாக மூன்று படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைவிடவும் துணிவு திரைப்படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் பெற்றிருக்கிறது.

பிப்ரவரியில் ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் ரொம்பவே தாமதமாக முடிவடைந்தது. அதற்கு மகிழ் திருமேனிதான் காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் இல்லை வேறு சில காரணங்கள் என்று இப்போது சொல்லப்படுகிறது. ஒருவழியாக படமானது பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் இரண்டு சிங்கிள்கள் சமீபத்தில் வெளியாக பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. துணிவு படம் போலவே இந்தப் படமும் ஹிட்டாக வேண்டும் என்ற ஆசையில் அஜித்தின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் பணிகளும் முடிந்துவிட்டன. அப்படமானது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டார் அஜித். அதில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை மந்த்ரா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
மந்த்ரா பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அஜித்குமார் ரொம்பவே ஜாலியான ஆள்தான். ரெட்டை ஜடை வயசு படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடித்தோம். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருந்தால் என்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் ஜாலியாக சீட்டு ஆடுவார் அஜித். நான் ரொம்பவே அமைதியான டைப். அவ்வளவு சீக்கிரம் நான் யாரிடமும் பேசிவிடமாட்டேன். எனது அப்பாவும், அம்மாவும் ஸ்பாட்டில் எப்போதுமே என்கூடத்தான் இருப்பார்கள்.
அஜித்தை பார்ப்பேன்: அதனால்தான் நான் அமைதியாக இருப்பேன். அந்த சமயத்தில் நான் அஜித்தை பார்த்துக்கொண்டே இருப்பேன். நான் அஜித்தை பார்த்தால் ஏன் அவரை அப்படி பார்த்துக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்பார்கள். நானோ அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவேன். திருமணத்துக்கு பிறகுதான் அஜித் ரொம்பவே மாறிவிட்டார். வெத்தல கொடியே பாடல் ஷூட்டிங்கின்போது அஜித்துடன் ஷாலினியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அஜித் அவ்வளவு அமைதியாகவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











