42 வயதில் லவ்வர்ஸ் டே.. என்னம்மா இப்படி இறங்கி காட்டுறீங்க... ரேஷ்மாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கெத்தான மாமியாராக வரும் ரேஷ்மா பசுபுலேட்டி எப்போதுமே கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர், லவ்வர்ஸ் டேக்கு இடையழகை காட்டி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ரேஷ்மா பசுபுலேட்டிக்கு அந்த படத்தின் கதாப்பாத்திரன் பெயரை வைத்தே காமெடி உருவானது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக சாதுவான ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

42 வயதில் லவ்வர்ஸ் டே : தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் 3 பெண்களுக்கு அம்மாவாக சாமுண்டீஸ்வரியாக என்கிற கெத்தான மாமியாராக நடித்து வருகிறார். தற்போது ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்திற்கு ஸ்பெஷல் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் வெறும் இடையழகை மட்டும் காட்டி, "இந்த காதலர் தினத்தில் ஒரு காதல் கடிதம் எழுதுகிறேன்" என பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் 42 வயதில் லவ்வர்ஸ் டே கொண்டாட்டமா? என்றும், இடுப்பை மட்டும் காட்டி இப்படி இறங்கி காட்டுறீங்களே கருத்துக்களை பகிர்ந்து அவரை கிண்டலடித்து வருகின்றனர். கார்த்திகை தீபம் சீரியலில் கெத்தான மாமியாராக காட்சியளிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, சமூக வலைதளங்களில் கிளாமர் லுக்கில் தோன்றி ரசிகர்களை மிரட்டி வருகிறார். அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்த ரேஷ்மா பசுபுலேட்டி, தெலுங்கு சினிமாவில் பல நல்ல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவர். இவர் 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிகர் பாபி சின்ஹாவின் சகோதரியும் ஆவார்.


Click it and Unblock the Notifications











