தர்ஷன் எனக்கு துரோகம் பண்ணாரு.. ஆனால், நியாயம் வேண்டாமா? பரபரப்பு வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர் குடியிருக்கும் வீட்டில் அருகே பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் உயர்நீதி மன்ற நீதிபதியின் மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, எதிர்தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தர்ஷனை கைது செய்தனர். இதுகுறித்து ஒரு வீடியோவை நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், என் நண்பர்கள் அனைவரும் தர்ஷன் கைது என்ற செய்தியை எனக்கு ஷேர் செய்தார்கள் . அதை பார்த்ததும், சத்தியமாக எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஏனென்றால் பல துரோகங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதனால், இந்த செய்தியை கேட்டு நான் ஒரு தடவை மகிழ்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு சாதாரண பெண் தானே. ஆனால், இன்னொருத்தருக்கு நடக்கும் அநியாயத்தில், என்னுடைய நியாயத்தை நான் தேட முடியாது. இதனால், எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டேன். தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவருக்காக நான் கூட குரல் கொடுத்து இருப்பேனா? இல்லையா? என்று. நிச்சயமாக நான் குரல் கொடுத்திருப்பேன்.

நடிகை சனம் ஷெட்டி: அதற்காக என்னை நான் மதர்தெரசா என்றெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. என் மனசாட்சிக்கு எதிராக நான் ஒரு விஷயத்தை செய்தேன் என்றால், நைட் எனக்கு தூக்கம் வராது. வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், நைட் தூங்கும் போது நிம்மதியாக தூங்க வேண்டும். ஏனென்றால், நான் யாருக்குமே வேண்டுமென்றே எந்த விதமான துரோகத்தையும் செய்தது இல்லை. அதற்காகத்தான் இந்த விஷயம் குறித்து இப்போது பேசுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. காரணம் ஒரு பார்க்கிங் சண்டை இவ்ளோ பெரிய அளவில் பூதாகரமாக ஆக்கப்பட்டு, அதே நாளில் தர்ஷன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவ்வளவு வேகமாக சட்டம் தன் கடமையை செய்யுமா?

Bigg Boss Darshan Sanam Shetty

சிசிடிவி ஆதாரம் எங்கே: அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து இருக்கிறார்கள். ஒரு வழக்கை விசாரித்துவிட்டுத்தான் அரெஸ்ட் பண்ணுவாங்க. ஆனால், இந்த கேசில் எதிர் மனுதாரர் உயர்நீதிமன்ற நீதிபதியோட மகன் என்பதால், இவ்வளவு அவசரமா? சண்டை நடந்த போது இருந்த சிசிடிவி ஆதாரம் எங்கே? இந்த பிரச்சனைக்கு பின் இருக்கும் உண்மை வெளிவர வேண்டும். தவறு செய்யாதவர்கள் தண்டனை அனுபவித்தால், அது மிகப்பெரிய குற்றம். அதை பண்ண நாங்க விடமாட்டோம் என நடிகை சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

Bigg Boss Darshan Sanam Shetty

நடிகர் தர்ஷனின் வீட்டின முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காரை நிறுத்திவிட்டு, தேநீர் கடைக்கு சென்றுள்ளனர். கார் நீண்ட நேரமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியிருக்கிறார். இதனால், இவருக்கும், இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் காயம் அடைந்ததாக நீதிபதியின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது அவருக்கு எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. மேலும், சனம் ஷெட்டி, தர்ஷன் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X