சூர்யா 44.. படத்தில் நடனமாடிய முன்னணி நடிகை யார் தெரியுமா?.. அட வேற மாதிரி இருக்குமே

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. மேலும் படத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோலும் செய்தனர். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து வெளியான இந்தப் படமும் தோல்வியடைந்திருப்பதால் ரசிகர்களும், சூர்யாவும் கொஞ்சம் அப்செட்டிலேயே இருக்கிறார்கள். அதேசமயம் அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் சூர்யா 44 படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள் அவர்கள்.

சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. சூர்யா நடிப்பில் படம் வெளியாகி மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. எனவே இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. சூர்யாவை வைத்து சிவா செய்துவிட்டார் என்று கடுமையான ட்ரோலை முன்வைத்தார்கள். முக்கியமாக படத்தில் சத்தம் அதிக அளவு இருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது குறைகளை அடுக்க ஆரம்பித்தார்கள்.

suriya kanguva karthik subbaraj

ஜோதிகா சப்போர்ட்: ரசிகர்கள் மட்டுமின்றி திரை விமர்சகர்களும் கங்குவாவை கழுவி ஊற்றினார்கள். ஆனால் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கங்குவா படத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் செய்தார். குறிப்பாக இந்தப் படத்தின் மீது வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனங்களை சிலர் வைத்தார்கள் என்றும்; படத்தில் உள்ள நல்ல விஷயங்களை மறந்துவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து ஜோதிகாவையும் பலர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சூர்யா 44: கடந்த மூன்று வருடங்களில் வெளியான சூர்யாவின் இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்திருப்பதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படத்தின் மீது அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்களில் கார்த்திக் தனது மேக்கிங்கிலும், கதையிலும் வித்தியாசம் காட்டுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எதற்கும் துணிந்தவன், கங்குவா பட தோல்விகளுக்கு சூர்யா 44 மருந்திடும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

முடிந்த பணிகள்: படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. சூர்யா விண்டேஜ் லுக்கில் கலக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதன்முறையாக சூர்யாவை வைத்து அவர் இயக்கியிருப்பதால் எந்த மாதிரியான் ட்ரீட்மெண்ட்டை படத்தில் கொடுக்கப்போகிறார் கார்த்திக் சுப்புராஜ் என்ற ஆவலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் சூர்யா 44 படம் பற்றிய புதிய விஷயம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரேயாவின் நடனம்: அதாவது இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபல நடிகை ஸ்ரேயா நடனமாடியிருக்கிறார். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். விஜய், விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்த அவர் மிகச்சிறந்த டான்ஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது கரியரின் கிராஃப் கொஞ்சம் இறங்குமுகத்தில் இருந்தபோது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் அவர். இப்போது மீண்டும் திரையில் தோன்றவிருப்பதால் நிச்சயம் செம ட்ரீட் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X