Shruti Haasan: போட்டோஷுட்டில் மிரட்டும் நடிகை ஸ்ருதி ஹாசன்!
சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது தனித்துவமான நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்துவரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ஸ்ருதி ஹாசன். நடிகை மட்டுமல்லாமல் பாடகி, இசை அமைப்பாளர், மற்றும் ஃபேஷன் ஐகான் என்ற பல முகங்களை கொண்ட இவர், சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவர் கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர், துல்கர் சல்மானுடன் 'ஆகாசம் லோ ஒக்கா தாரா' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயம், படப்பிடிப்பு தருணங்கள், ஸ்டைலிஷ் லுக்குகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதனால் தான், ரசிகர்களுடன் நேரடி தொடர்பை எப்போதும் பேணிக்கொண்டு இருக்கும் சில நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர் எனலாம். தற்போது ஸ்ருதி ஹாசன் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களில் அவர் தேர்ந்தெடுத்துள்ள ஆடை அலங்காரம், மேக்கப் ஸ்டைல், மற்றும் அவரது நம்பிக்கையுடன் கூடிய போஸ் என அனைத்தும் சேர்ந்து ஒரு தனித்துவமான கவர்ச்சியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, மாடர்ன் மற்றும் எலெகண்ட் லுக்கை ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அட்டகாசமான போட்டோஸ்: இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி, பல சினிமா பிரபலங்களும் அவரது லுக்கை பாராட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், மீண்டும் ஒருமுறை தனது ஸ்டைலும், கவர்ச்சியும் மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.


Click it and Unblock the Notifications











