ஒல்லி இடுப்பில் ஜில்லுன்னு ஒரு கிளிக்... அசத்தும் வேதிகா!
மும்பை : இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தவர் வேதிகா.
மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்போது சேதி மந்தாரம் துளசி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
முதல் படத்தில் பார்த்தது போலவே இன்றும் அதே இளமையுடன் இருக்கும் வேதிகா இப்பொழுது ஒல்லி இடுப்பில் ஜில்லுன்னு ஒரு கிளிக்கை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறது.

கவர்ச்சியையும் சேர்த்து
நடன இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கி வரும் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக தமிழில் இயக்குனராக அறிமுகமான முனி திரைப்படத்தில் நடித்து பலருக்கு பரிச்சயமானவர். முனி படத்தின் தொடர்ச்சியாக உருவான காஞ்சனா 3லும் நடித்திருந்தார். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் சற்று பிரம்மாண்டமாக உருவாகி இருக்க வேதிகாவும் நடிப்பில் கவர்ச்சியையும் சேர்த்து அதகளம் செய்திருந்தார்.

வித்தியாசமான நடிப்பை
இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் விருதுகளை குவித்து வரும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான பரதேசி திரைப்படம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கொத்தடிமைகளாக வாழும் தமிழ் மக்களைப் பற்றிய படமாக எடுக்கப்பட்டு இருக்க இதில் கதாநாயகியாக நடித்திருந்த வேதிகா இதுவரை கண்டிராத அளவிற்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் வென்றதோடு விருதுகளையும் வாங்கினார்.

இரு மொழிகளில்
தமிழில் இப்பொழுது வினோதன் மற்றும் ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி உள்ள வேதிகா இதில் ஜங்கிள் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டு வர இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வருகிறது.

ஒன்லி இடுப்பை
கடந்த மூன்று வருடங்களாக இவருக்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத போதும் இன்றும் பல ரசிகர்களைக் கொண்டுள்ள வேதிகா சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உடன் தனி சாம்ராஜ்யம் நடித்தி வருகிறார். இதற்கு முன் மாலத்தீவுக்கு சென்று எடுத்த பிகினி புகைப்படங்கள் அனைவரையும் வாய் பிளக்க வைத்ததை தொடர்ந்து இப்பொழுது ஸ்லிம்மான தேகத்தில் ஒன்லி இடுப்பையும் க்யூட்டான தொப்புளையும் காட்டிக்கொண்டு ஜில்லுனு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்க இதைப்பார்த்த ரசிகர்கள் குஷியில் ஆஹா ஓஹோ என புகழ்ந்தும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











