யப்பா சூர்யா மாதிரிலாம் இவர் இல்லை..கார்த்தி பற்றி ஓபனாக பேசிய நடிகை.. இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யாரே, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் கார்த்தி பற்றி நடிகை யுவராணி ஓபனாக சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.
ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் கடந்த வருட தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏமாற்றம்: படத்தின் ட்ரெய்லர் நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தினாலும் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கார்த்திக்கு என்னதான் ஆச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். முக்கியமாக இது ராஜுமுருகன் படம் மாதிரியே இல்லை அவ்வளவு போராக படம் செல்கிறது. படம் சுமார் ரகத்துக்கும் கீழேதான் என ஓபனாகவே சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்தனர்.
அடுத்த படங்கள்: இந்த சூழலில் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி அடுத்ததாக கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் கார்த்தி ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யாரே, டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார். மெய்யழகன் படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.
யுவராணி பேட்டி:இந்நிலையில் நடிகை யுவராணி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "சிங்கம் படத்தில் சூர்யாவுடன் நடித்தேன். அவருடைய அர்ப்பணிப்பை பார்க்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். அவரை பார்த்தா ரிசர்வ் அல்லது ஸ்ட்ரிட் என்று சொல்லவே முடியாது. ஆனால் கார்த்தி அப்படி இல்லை. ஃப்ரெண்ட்லியாக பழகுவார். நாம் நமது வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி பேசுவோமோ அதுபோல் அவர் பேசுவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











