சிம்பு கூடவா... ஜோடி சேர தயங்கும் நடிகைகள்
சென்னை: சிம்புவுடன் சேர்ந்து நடித்தாலே ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுவதால் நடிகைகள் அவருடன் ஜோடி சேர தயங்குகிறார்களாம்.
சிம்புவுடன் நடித்தால் அந்த நடிகைகள் குறித்து ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுகிறது. சும்மாவே சிம்பு என்றாலே ஏராளமான கிசுகிசு எழுதுறாங்க என்று அவரே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கூறியிருப்பார். அவருக்கும், கிசுகிசுவுக்கும் அப்படி ஒரு ராசியாக உள்ளது.
இந்நிலையில் தான் அவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஹன்சிகா தனது காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

திருமணம்
காதலை ஒப்புக் கொண்ட ஹன்சிகா திருமணம் மட்டும் 5 ஆண்டுகள் கழித்து தான் என்று கன்டிஷனாக தெரிவித்துவிட்டார். தற்போது அவர் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

பிரச்சனை
ஹன்சிகாவை போன்று இல்லாமல் சிம்பு திருமணத்திற்கு அவசரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

ஆண்ட்ரியா விவகாரம்
வி.டி.வி. கணேஷின் இங்க என்னா சொல்லுது படத்தில் சிறிது நேரம் நடித்துவிட்டு வந்த ஆண்ட்ரியா, சிம்பு ஆகியோருக்கு இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின.

நடிகைகள் தயக்கம்
சிம்வுடன் நடித்தாலே ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுகிறது என்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய நடிகைகள் தயங்குகிறார்களாம். இந்நிலையில் கௌதம் மேனன் தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பை வரவு ஒருவரை நடிக்க வைக்கிறாராம்.

ஹீரோயின் இல்லாமலே
சிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. ஆனால் ஹீரோயின் மட்டும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. பாண்டிராஜ் சிம்புவுக்காக தேவதை தேடிக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











