ஆஹா ரூட் அப்படி போகுதா?.. ஆதிக்குடன் மீண்டும் இணைகிறாரா அஜித்குமார்?

சென்னை: அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் விடாமுயற்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. குட் பேட் அக்லி அவரது பிறந்தநாளையொட்டி மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று கேள்விகள் எழுந்த சூழலில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருந்தது. அதனையடுத்த் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தின் வேலைகள் விரைவாக தொடங்கி மிக மெதுவாக நடந்தன. ஒருவழியாக வேலைகள் முடிவடைந்து படமானது ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ajith adhik ravichandran good bad ugly

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கி அறிமுகமான ஆதிக் அடுத்ததாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை சிம்புவை வைத்து இயக்கினார். முதல் படத்தில் சர்ச்சைகளை சந்தித்த அவர்; தான் இயக்கிய இரண்டாவது படத்தில் படுதோல்வியை சந்தித்தார். அதற்கு காரணம் சிம்புதான் என்று அவரும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் ஓபனாக பேசினார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

மார்க் ஆண்டனி: முதல் இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்ததன் காரணமாக இனி அவரது சினிமா கரியர் அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் ஆதிக். டைம் ட்ராவல் ஜானரில் அந்தப் படத்தை அவர் உருவாக்கியிருந்தார். படத்தின் கதை சுமார்தான் என்றாலும் ஆதிக்கின் மேக்கிங்கும், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பும் படத்தை நன்றாகவே காப்பாற்றியது. மேலும் நூறு கோடி ரூபாய்வரை படம் வசூலித்ததாகவும் பேசப்பட்டது.

அஜித்தை வைத்து நிரூபிப்பாரா?: இப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் மார்க் ஆண்டனி வெற்றியால் மட்டும் அவருக்கு அஜித் இந்த வாய்ப்பை கொடுக்கவில்லை; தன்னுடன் நேர்கொண்ட பார்வையில் ஆதிக் நடித்தபோதே அவருக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்துவிட்டார். அப்போதே ஒரு அவுட் லைனை அஜித்திடம் சொல்லி அவர் ஓகே வாங்கியிருந்தார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இந்தப் படத்தில் அவர் தன்னை நிரூபிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

மீண்டும் ஆதிக்குடன்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது குட் பேட் அக்லி படத்தை இயக்கியிருக்கும் விதம் அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் அதன் காரணமாக மீண்டும் அவருடன் இணைந்து படம் செய்ய முடிவு செய்துவிட்டதாகவும்; மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாகத்தை முடித்துவிட்டு அஜித்தை ஆதிக் மீண்டும் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆஹா சிவாவுடன் எப்படி அஜித் தொடர்ந்து பயணித்தாரோ அதேபோல் ஆதிக்குடனும் செய்வாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X