கமலுடன் இணையும் ஆட்லேப்ஸ்
கமல்ஹாசனுடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க களம் இறங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்லேப்ஸ்.
| Click here for more images |
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சந்தை, உள்ளூர் தயாரிப்பாளர்களையும் தாண்டி, பெரிய பெரிய நிறுவனங்களையும் கவர ஆரம்பித்துள்ளன. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் பல தமிழ்ப் படங்களைத் தயாரிக்க ஆர்வம் கொண்டு அலைமோதியவண்ணம் உள்ளன.
அந்த வகையில் இந்திப் படத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆட்லேப்ஸ் நிறுவனம் தமிழில் படம் தயாரிக்க வந்துள்ளது.
கலைஞானி கமல்ஹாசனுடன் இணைந்து புதிய, பிரமாண்டப் படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது ஆட்லேப்ஸ்.
இதுதொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் கையொழுத்தானதாம். கமலை வைத்து இரு படங்களைத் தயாரிக்கவுள்ளது ஆட்லேப்ஸ். இதில் ஒரு படத்தை கமல்ஹாசனை எழுதி, இயக்கவுள்ளார். இன்னொரு படத்தை முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்குவார்.
ஏற்னவே ஆட்லேப்ஸ் நிறுவனம் பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பாலாஜியுடன் இணைந்து கிரீடம் படத்தைத் தயாரித்தது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது தனித்து படம் தயாரிக்க களம் கண்டுள்ளது.
கமல் தவிர விஜய், விஷால் ஆகியோரை வைத்தும் அடுத்தடுத்து ஆட்லேப்ஸ் படம் தயாரிக்கவுள்ளது.
தற்போது தெலுங்கில் நாகார்ஜுனாவை வைத்து ஆட்லேப்ஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
கமல் மும்பையைத் தேடி ஒரு காலத்தில் போய்க் கொண்டிருந்தார். இப்போது மும்பையே கமலைத் தேடி ஓடி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











