வாவ்.. சினேகாவின் பிரசன்னாவா இது?.. ஸ்டன் ஆக்கும் ஸ்டில்கள்!

சென்னை: நடிகர் பிரசன்னா என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்?. சாக்லேட் பாய் லுக், சாப்ட் குரல், மென்மையான நடிப்பு, அமைதி, சினேகாவின் கணவர் என்றுதானே தோன்றும்.

ஆனால் அப்படியே எல்லாமே மாறிப் போச்சு பாஸ். பிரசன்னாவும் இப்போது அதகளமான பாடி ஷேப்புக்கு மாறி விட்டார். அதாவது அதிரடி ஆக்ஷனுக்கேற்ற ஆஜானுபாகு உடலுக்கு மாறி விட்டார் பிரசன்னா.

சிக்ஸ் பேக் வைத்து கட்டுடலுக்கு மாறி நிற்கும் பிரசன்னாவைப் பார்த்தால்.. பார் சரவணா பார் என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவுக்கு ஆளே மாறிப் போய் நிற்கிறார் மனிதர்.

அமீர்கான்...

சமீபத்தில்தான் டங்கல் படத்திற்காக ஆமிர்கான் தனது உடல் வாகை முற்றாக மாற்றியமைத்து அதன் ஸ்டில்கள் வெளியானது. அதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இப்போது பிரசன்னாவும் அந்த வேலையைப் பார்த்துள்ளார்.

அரிதிலும் அரிது...

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இதுபோன்ற முயற்சிகள் மிக மிகக் குறைவாகும். குறிப்பாக சாப்ட்டான கேரக்டர்களில் நடித்து வரும் நடிகர்கள் சிக்ஸ் பேக் வைப்பது என்பது மிக மிக அரிதாகும்.

சூர்யா...

சூர்யா...

முன்பு சூர்யா சிக்ஸ் பேக் வைத்தபோது அனைவரும் அடடா என்று ஆச்சரியப்பட்டனர். அந்த சிக்ஸ் பேக்குடன் கூடுதல் அதிரடி காட்டி கலக்கினார் சூர்யா

மாதவன்...

மாதவன்...

இறுதிச் சுற்று படத்திற்காக இதேபோல மாதவனும் முரட்டு உடலுக்கு மாறி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தார், இப்போது பிரசன்னாவும் அந்தப் பாதைக்கு மாறியுள்ளார்.

புதிய படம்...

புதிய படம்...

நீண்ட காலமாக காணாமல் போயிருந்த பிரசன்னா, தற்போது அருண்வைத்தியநாதன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அர்ஜூன், வரலட்சுமியுடன் இணைந்து அவர் துப்பறியும் நிபுணராக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம்...

இன்ஸ்டாகிராம்...

அப்படத்திற்காகத் தான் இப்போது சத்தமில்லாமல் தனது உடலை கட்டுடலாக்கியுள்ளாரா அல்லது புதிய படமா எனத் தெரியவில்லை. ஆனால், தனது ஜிம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போட்டு அசத்தியுள்ளார் பிரசன்னா.

தீவிர உடற்பயிற்சி...

தீவிர உடற்பயிற்சி...

பிரசன்னா கடந்த சில மாதங்களாகவே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் விளைவு அவரது தசைகள் முறுக்கேறி முரட்டு உடலாக மாறி நிற்கிறது. கட்டுடலோடு கவர்ச்சிகரமாகவும் மாறி நிற்கும் பிரசன்னாவின் இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X