அமரன் அடித்த மெகா சிக்ஸர்.. சிவகார்த்திகேயன் காட்டில் மழைதான்.. சம்பளம் கிடுகிடு உயர்வு

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படமானது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி மெகா ஹிட்டடித்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ். இந்தச் சூழலில் எஸ்கே குறித்து புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சின்னத்திரையில் தனது கரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் பெரிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் எப்படி தான் வளர்ந்துவந்த காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள், குடும்பத்தினரை கவர்ந்தாரோ அதேபோல் சிவாவும் வளர்ந்திருக்கிறார். அதனை விஜய்யும் ஒரு மேடையில் பாராட்டி பேசியிருந்தார். எஸ்கே நடிப்பில் கடைசியாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

sivakarthikeyan amaran

அமரன்: இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இதில் சாய் பல்லவி ஹீரோயின். அயலான், மாவீரன் வெற்றிகளை தொடர்ந்து இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சிவா ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள்.

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி: அவர்கள் எதிர்பார்த்தபடியே படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. முக்கியமாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்தை தாங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் ராணுவ அதிகாரியாக வரும் சிவகார்த்திகேயன் தனது நடிப்பில் மிரட்டிவிட்டார் என்றும்; இது அவரது கரியருக்கு மிக முக்கியமான படம்; இதற்கு பிறகு எஸ்கேவின் ரேஞ்சே வேற என்று திரைத்துறையில் ஒருதரப்பினரும்; அவரது ரசிகர்களும் கூறிவருகிறார்கள்.

அடுத்த படம்: மேலும் படம் வெளியாகி மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். இதனால் விஜய் கொடுத்த துப்பாக்கி எஸ்கேவுக்கு பலிக்க ஆரம்பித்துவிட்டது. இனி தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி கண்டிப்பாக சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்று அடித்து கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் பற்றிய புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

என்ன தகவல்: அதாவது அமரன் படத்தை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார். இவைகளை முடித்துவிட்டு சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படத்தில் எஸ்கேதான் நடிக்கவிருக்கிறார் என்று கடந்த சில காலமாகவே ஒரு தகவல் போய்க்கொண்டிருக்கிறது. சுதா கொங்கரா படத்தை இயக்குகிறார். அதேசமயம் சுதாவும் எஸ்கேவும் சேர்வது உறுதிதான் ஆனால் அது புறநானூறு படமா இல்லை எழுத்தாளர் நரன் எழுதிய கதையை சுதா இயக்கவிருக்கும் அந்தப் படமா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் அந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாக அமையவிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சுதா கொங்கரா இயக்கவிருக்கும் அந்தப் படத்துக்கு எஸ்கே 40 கோடி ரூபாய்வரை சம்பளம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X