twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணாத்த வேலை முடிச்சாச்சு... ரஜினி எங்கே போனார் ?

    |

    சென்னை : அஜித்தை வைத்து எடுத்த விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் சிவா. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தீபாவளி ரிலீசாக நவம்பர் 4 ம் தேதி ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் தனது பங்கு வேலைகளை ஏற்கனவே முடித்து விட்டார் ரஜினி. தான் நடிக்க வேண்டிய காட்சிகள், டப்பிங் வேலைகள் என அனைத்தையும் முதல் ஆளாக முடித்து விட்டார் ரஜினி. சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி, சென்னை வந்திறங்கியதும் அரசியல், புதுக்கட்சி போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தயாராகும் அண்ணாத்த

    தயாராகும் அண்ணாத்த

    அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோல்கத்தா, லக்னோ போன்ற இடங்களில் நடந்து வருகிறது. ஆனால் இதில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. மற்ற நடிகர், நடிகைகளை வைத்தே இந்த படப்பிடிப்பை நடத்தி வருகிறார் டைரக்டர் சிவா. இறுதிக்கட்ட படப்பிடிப்புடன் சேர்த்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் கவனித்து வருகிறார்.

    இமயமலைக்கு பதில் பெங்களூரு

    இமயமலைக்கு பதில் பெங்களூரு

    வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் வேலைகளை முடித்த பிறகு இமயமலை சென்று தியானம் செய்வார் ரஜினி. இமயமலையில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த பிறகே அடுத்த படத்தின் வேலைகளில் இறங்குவார் ரஜினி. ஆனால் தற்போது கொரோனா பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளதால் இந்த முறை இமயமலை செல்லவில்லையாம். அதற்கு பதிலாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தான் ரஜினி ஓய்வெடுத்து வருகிறாராம்.

    தனிமையில் தியானம்

    தனிமையில் தியானம்

    அதே சமயம் பெங்களூரு வீட்டில் ரஜினி தனியாக தான் இருந்து வருகிறாராம். அங்கு அவர் தியானத்தில் ஈடுபட்டு, ஓய்வெடுத்து வருகிறாராம். அது மட்டுமல்ல தான் அடுத்தபடியாக நடிக்க உள்ள படம் பற்றிய கதை ஆலோசனையிலும் ரஜினி ஈடுபட்டு வருகிறாராம்.

    தலைவர் 169 க்கு தயாராகும் ரஜினி

    தலைவர் 169 க்கு தயாராகும் ரஜினி

    ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய டைரக்டர் தேசிங்கு பெரியசாமி தான் இயக்க போவதாக கூறப்படுகிறது. தலைவர் 169 காக தேசிங்கு பெரியசாமி கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இந்த கதை கவர்ந்ததால், உடனே ஓகே சொல்லி விட்டாராம் ரஜினி.

    அரைமணி நேரத்திற்கே 100 கோடியா

    அரைமணி நேரத்திற்கே 100 கோடியா

    ஆனால் இந்த படத்தில் ஒரு பிளாஷ்பேக் காட்சி வருகிறதாம். ராஜா காலத்து பிளாஷ்பேக் காட்சி அரைமணி நேரம் இடம்பெறுகிறதாம். இது படத்தில் மிக முக்கியமான காட்சியாம். இந்த பிளாஷ்பேக் காட்சிக்கு மட்டும் 100 கோடி செலவாகும் என கணக்கிடப்படுகிறதாம். அரைமணிநேர பிளாஷ்பேக்கிற்கே 100 கோடி என்றால், படத்தின் ஒட்டுமொத்த செலவும் எங்கேயோ போய் விடும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் படத்தை தயாரிக்க தயங்குகிறார்களாம்.

     தலைவர் 169 தயாரிப்பாளர் யார்

    தலைவர் 169 தயாரிப்பாளர் யார்

    இதனால் இந்த பிளாஷ்பேக் காட்சியை 10 நிமிடங்களாக குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். இதனால் தலைவர் 169 படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர்கள், கதை உள்ளிட்டவைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு தலைவர் 169 படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    English summary
    After completing Annaatthe shooting, now Rajini is in Bengaluru house. Instead of go to Himalayas, this time rajini go to bengaluru house. In bengaluru, rajini also involving in thalaivar 169 discusstion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X