கமல்ஹாசன் எடுத்திருக்கும் அதிரடி முடிவு?.. முழு சுதந்திரம் கொடுத்துட்டாராம்.. இயக்குநர்கள் ஹேப்பி

சென்னை: கமல்ஹாசன் இப்போது பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்திருக்கிறார். அதன்படி சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அந்தப் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து அரசியல் தளத்துக்கு சென்ற கமல்ஹாசனுக்கு அங்கு பெரிய அளவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து; தனது ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

சீனியர்களை நம்பி மோசம்: விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்த உற்சாகத்தோடு சீனியர் இயக்குநரான ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்தார். முதல் பாகம் போன்றே இதுவும் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தால்; படம் பாதாளத்தில் விழுந்துவிட்டது. சரி இந்தியன் 2தான் மோசம் செய்துவிட்டது; மணிரத்னமாவது காப்பாற்றுவார் என எண்ணி தக் லைஃப் படத்தில் நடித்தார்.

After Back-to-Back Failures Kamal Haasan Gives Full Creative Freedom to Anbariv for His Next Film
Photo Credit:

அதுவும் அடிதான்: ஆனால் அந்தப் படமும் அடிதான் வாங்கியது. இந்தியன் 2 போலவே தக் லைஃபையும் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டார்கள் ரசிகர்கள். சொல்லப்போனால் அவரது ஒட்டுமொத்த கரியரில் இதுவரை இந்த இரண்டு படங்கள் மாதிரி வேறு எந்த படமும் இவ்வளவு மோசமான கிண்டலையும் விமர்சனத்தையும் சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் உடனடியாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் உலக நாயகன்.

அன்பறிவுடன் கூட்டணி: சீனியர் இயக்குநர்களை நம்பி மோசம் போனதால் தனது பார்வையை இளம் இயக்குநர்கள் பக்கம் திருப்பியிருக்கிறார் கமல். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சண்டை பயிற்சியாளர்களாக வரும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கமல் கொடுத்த சுதந்திரம்: அதாவது தான் கமிட்டாகும் படங்களில் கதை உள்ளிட்ட விஷயங்களில் கமல் தலையிடுவது வழக்கம்தான். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எந்த தலையீடும் செய்வது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். கதை, திரைக்கதை, டெக்னீசியன்கள் உள்ளிட்ட விஷயங்களில் அன்பறிவுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து உங்கள் தேவைப்படி அமைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதாக கோலிவுட்டில் தகவல்கள் பறக்கின்றன. கமலுக்குள் வந்திருக்கும் இந்த மாற்ற படத்துக்கு உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X