சூர்யா வெறித்தனமா இருக்காரு போல.. அவரை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்துக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஜித்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இரண்டு ஹிட் டைரக்டர்களுடன் சூர்யா இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவரது புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்களின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்து நடித்தார் சூர்யா. ஆனால் இரண்டு படங்களுமே அவருக்கு காலை வாரிவிட்டன. படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தன. அந்தப் படங்களுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இதில் திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

எப்போது ரிலீஸ்?: படத்தின் பணிகள் நீண்ட காலமாக நடந்துவந்தன. ஒருவழியாக சமீபத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. தான் படத்தை பார்த்துவிட்டதாகவும்; காத்திருப்புக்கு ஒர்த்தான படம்தான் என்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறார். படமானது ஜனவரி அல்லது பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
ஹிட் கிடைக்குமா?: ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே இயக்கியிருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருந்தது. எனவே அந்த வைபை இதிலும் தக்க வைப்பார் என்று நம்பலாம். இதையெல்லாம் தாண்டி சூர்யாவுக்கு பெரிய வெற்றி ஒன்று இப்போது தேவைப்படுகிறது. அது இதில் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். படத்தின் டீசரை பார்த்து அவர்கள் ரொம்பவே திருப்தியடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இரண்டு ஹிட் இயக்குநர்களுடன்: இது ஒருபக்கம் இருக்க சூர்யாவின் அடுத்தடுத்த லைன் அப் மிரட்டலாக இருக்கின்றது. லக்கி பாஸ்கர் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த வெங்கி அட்லூரி இயக்கத்திலும், மெகா ஹிட்டான ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவ்விரண்டு படங்களும் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்பது அனைவரது வானளாவிய நம்பிக்கையாக இருக்கிறது. ஒருவேளை கருப்பு மிஸ் ஆனாலும் இந்த படங்கள் தரமான சம்பவத்தை செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்?: இந்நிலையில் சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெங்கி அட்லூரி, ஜித்து மாதவன் படங்களை முடித்துவிட்டு டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். சமீபத்தில் சூர்யாவை சந்தித்து கதை சொல்லி அஸ்வத் ஓகே வாங்கிவிட்டதாகவும்; விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் திரைத்துறையினர் சொல்கிறார்கள்.
ரஜினிக்கு சொன்ன கதையா?: அதுமட்டுமின்றி டிராகன் பட வெற்றி சமயத்தில் அஸ்வத்தை வரவழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது தனக்கு ஒரு கதை இருக்கிறதா என ரஜினி கேட்டார். அஸ்வத்தும் ஒரு லைனை சொன்னார். ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகளால் ரஜினியால் அதில் நடிக்க முடியவில்லை. அந்தக் கதையைத்தான் சூர்யாவை வைத்து அஸ்வத் இயக்கப்போகிறார் எனவும் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











