Peddi Box Office: அப்பாவை போலவே இந்த ஆண்டு 300 கோடி வசூலை தாண்டிய ராம் சரண்.. பெத்தி 5 நாள் வசூல்!

ஹைதராபாத்: இந்த ஆண்டு தெலுங்கு சினிமாவை அப்பா சிரஞ்சீவி மற்றும் மகன் ராம்சரண் தான் பாக்ஸ் ஆபிஸில் தூக்கி நிறுத்தியுள்ளனர். டோலிவுட்டின் மெகா ஸ்டார் என பல ஆண்டுகளாக கொண்டாடப்படும் சிரஞ்சீவி இந்த ஆண்டு பொங்கலுக்கு மன சங்கர வர பிரசாத் காரு படம் மூலம் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஆரம்பத்திலேயே டோலிவுட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

இந்நிலையில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இந்த மாதம் இன்னொரு 300 கோடி வசூலை டோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் இணைத்துள்ளார். அப்பா படத்தை விட அதிக வசூலை 5 நாட்களிலேயே அசால்ட்டாக ஈட்டியுள்ளார் ராம் சரண்.

After Chiranjeevi Now his son Ram Charan delivers 300 Crore Box Office for Tollywood with Peddi

ஜான்வி கபூரின் கிளாமர் சர்ச்சை படத்தை கொஞ்சம் ஸ்லோவாக்கிய நிலையிலும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்த காரணமே ராம்சரணின் ஸ்டார்டம் தான் என்கின்றனர். பெத்தி 5 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

சிரஞ்சீவி 300 கோடி வசூல்: அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் டோலிவுட் குடும்பங்களை தியேட்டருக்கு வரவழைத்த நிலையில், ஜனவரி மாதமே 300 கோடி அளவுக்கு உலக வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான மற்ற படங்கள் எல்லாம் பெரியளவில் கை கொடுக்கவில்லை. சிரஞ்சீவிக்கும் தொடர்ந்து படங்கள் ஃப்ளாப் ஆகி வந்த நிலையில், மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் 300 கோடி வசூலை சாத்தியமாக்கியது.

கருப்பு 300 கோடி: தென்னிந்திய சினிமாவில் சிரஞ்சீவி படத்துக்குப் பிறகு தமிழில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ் நடித்த கருப்பு திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ய முடியாமல் போய் விட்டது.

300 கோடி கிளப்பில் பெத்தி: 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ராம் சரணின் பெத்தி திரைப்படம் 5 நாட்களில் இதுவரை உலகளவில் 315 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளி சக்கைப் போடு போட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளது. ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் தோல்வியை தழுவிய நிலையில், பெத்தி அவருக்கு கம்பேக் படமாகவே மாறியுள்ளது. 2வது வார இறுதியில் கண்டிப்பாக இந்த படம் 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்ட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 500 முதல் 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர். இந்தியாவில் பெத்தி திரைப்படம் 200 கோடி வசூலை தாண்டியுள்ளதாக சாக்னிக் உள்ளிட்ட தளங்கள் தெரிவித்துள்ளன. ஜான்வி கபூரின் அதீத கிளாமர் சர்ச்சை மற்றும் அத்துமீறிய ராம் சரணின் லிப் லாக் முத்தக் காட்சிகள் தான் படத்தின் வசூல் வேட்டைக்கு பெரிய ஓட்டை போட்டு விட்டதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X