சியான் விக்ரம் செஞ்சிட்டாரு.. அடுத்து அஜித் குமார், சூர்யா இந்த வருஷம் தூள் கிளப்ப ரெடியாகிட்டாங்க!

சென்னை: பல ஆண்டுகளாக சியான் விக்ரம் சோலோ ஹிட் கொடுக்கவில்லையே என அவரது ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில், அதற்கு மிகப்பெரிய விடையாக வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மற்றவர்களை படத்தை பார்க்கத் தூண்டி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டிராகன் படத்தைத் தொடர்ந்து வீர தீர சூரன் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் 2 படம் ரிலீஸ் ஆவதில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் ரசிகர்களை ரொம்பவே வருத்தமடைய செய்தது. துருவ நட்சத்திரம் படம் ஏற்கனவே பல ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில் இந்த படமும் அப்படி ஆகிவிடுமோ என ரசிகர்கள் பயந்தனர். ஆனால், நேற்றே படத்தை ரிலீஸ் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ரியா சிபு செய்தது ரசிகர்களை நிம்மதியடைய செய்தது.

After Chiyaan VIkram Now Ajith Kumar and Suriya ready to give strong comeback soon

சியான் விக்ரமின் வீர தீர சூரன் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தி வரும் நிலையில், அடுத்ததாக ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமாரின் குட் பேட் அக்லி மற்றும் மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தரமான சம்பவத்தை செய்யும் என ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் சோஷியல் மீடியாவில் கெத்துக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ரெட்ரோ ரீல்ஸ்: சமூக வலைதளங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவின் ரெட்ரோ பட ரீல்ஸ்கள் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான "கனிமா" பாடல் அந்த அளவுக்கு சம்பவம் செய்து வருகிறது. இளம் பெண்கள் எல்லாம் பூஜா ஹெக்டே போல பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு போட்ட ஆட்டத்தை பார்த்து அனைவரும் ஆடிப்போயுள்ளனர். ரெட்ரோ படத்தின் ரிலீஸுக்காக சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு ரொம்பவே அவர்கள் எதிர்பார்த்த கங்குவா திரைப்படம் படுதோல்வியை அடைந்த நிலையில், ரெட்ரோ படத்தின் மூலம் சூர்யா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Chiyaan VIkram Now Ajith Kumar and Suriya ready to give strong comeback soon

குட் பேட் அக்லிக்கு வெயிட்டிங்: அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே இந்த ஆண்டு குட் பேட் அக்லி படத்துக்காக காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், குட் பேட் அக்லி படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா? அல்லது ரஜினிகாந்தின் கூலி படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா? என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன.

அஜித் ரசிகர்கள் ஆர்வம்: சியான் விக்ரம் தனது ரசிகர்களை வீர தீர சூரன் படத்தின் மூலம் திருப்திப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு விடாமுயற்சி படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதாக அஜித் திருப்திப்படுத்தாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாக உள்ள குட் பேட் அக்லி 100 சதவீதம் அஜித் ரசிகர்களுக்கான படமாக அமையும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X