ஜெய்பீம் இயக்குநருடன் சேரும் சூர்யா?.. போடு வெடிய.. தரமான கூட்டணி இந்த முறை தியேட்டரில் பிளாஸ்ட்தான்
சென்னை: சூர்யா இப்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்த கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து தரமான தியேட்டரிக்கல் ஹிட் கிடைத்திருப்பதால் அவரும் அவரது ரசிகர்களும் நிம்மதி. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், கேமரா மேன் விஷ்ணு ஆகியோருக்கு புதிய காரையும் பரிசாக கொடுத்தார். மேலும் நேற்று தன் மனைவியுடன் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்.
தமிழ் சினிமாவில் கதை தேர்ந்தெடுக்கும் ஹீரோக்களில் சூர்யா எப்போதும் டாப் கிளாஸில் இருப்பவர். வித்தியாசமான மற்றும் புதுமையான கதைகளை தேர்வு செய்தாலும் அந்தப் படங்கள் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை. ஞானவேல் இயக்கத்தில் நடித்த ஜெய்பீம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த சூரரைப் போற்று ஆகிய இரண்டு படங்களின் கதைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை தேர்ந்தெடுத்து சூர்யா நடித்து அவை மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஆனாலும் அந்தப் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின.

தியேட்டரிக்கல் ஹிட்: அதன் காரணமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற சூர்யா படங்கள் வரிசையில் அந்தப் படங்கள் இல்லை. அவர் எதிர்பார்ப்போடு நடித்த எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ ஆகிய மூன்று படங்களுமே திரையரங்குகளில் வெளியாகி தோல்வியைத்தான் சந்தித்தன. இனிமேல் சூர்யாவால் ஒரு கமர்ஷியல் ஹிட்டே கொடுக்க முடியாதா?.. இப்படியே போனால் இப்போது இருக்கும் இடத்தை விட்டு சீக்கிரமே கீழே இறங்கிவிடுவார் என்று அவரது ரசிகர்கள் அச்சத்தில் இருந்தார்கள்.
கம்பேக் தந்த சூர்யா: அப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார். திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். கடந்த மாதத்தில் வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சூர்யாவின் நடிப்பு, பாலாஜியின் மேக்கிங், சாயின் இசை எல்லாம் அட்டகாசமான ரிசல்ட்டை கொடுத்திருக்கின்றன. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம்; உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் அள்ளியிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து இப்படி ஒரு ஹிட் கிடைத்திருக்கிறது சூர்யாவுக்கு.
நிம்மதியில் சூர்யா: இதனால் அவர் உச்சக்கட்ட நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார். அதன் வெளிப்பாடாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோருக்கு புதிய காரை பரிசளித்தார். மேலும் கருப்பண்ணசாமி கோயிலுக்கு மனைவியுடன் சென்று சாமி தரிசனமும் செய்துவருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் வரவிருக்கும் விஸ்வநாத்&சன்ஸ், சூர்யா 47 ஆகிய இரண்டு படங்களும் கருப்பு கொடுத்த ரிசல்ட்டையே கொடுக்கும் எனவும் நம்பிக்கையோடு இருக்கிறார்.
ஜெய்பீம் இயக்குநருடன்?: இந்நிலையில் சூர்யாவின் 48வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என்றும் தெரிகிறது. சூர்யா 47 படத்தை முடித்துவிட்டு இதன் ஷூட்டிங் தொடங்கலாம் எனவும் தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் இணைந்த ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்த முறை இவர்கள் இணையும் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்புகள் அதிகம்.


Click it and Unblock the Notifications
