பவன் கல்யாண் போட்ட ட்வீட்.. இன்ஸ்பயர் ஆன ராம் சரண்.. 70 லட்சம் ரூபாய் கொரோனா நிதி கொடுக்க ரெடி!

ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் ராம் சரண், கொரோனா நிவாரண நிதியாக 70 லட்சம் ரூபாயை அளிக்க முன்வந்துள்ளார்.

நடிகர் பவன் கல்யாண், கொரோனா பாதிப்பில் மக்கள் அல்லல் படாமல் இருக்க, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக ட்வீட் போட்டிருந்தார்.

After Pawan Kalyan tweet, Ram charan also wish to donate 70 lakh rupees for Corona fund

அவரது ட்வீட்டை பார்த்து இன்ஸ்பயர் ஆன ராம் சரண், 70 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளார்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளான ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் திரட்டும் கொரோனா நிவாரண நிதிக்கு, இந்த 70 லட்சம் ரூபாய் பணத்தை பிரித்து அளிக்கப் போவதாக நடிகர் ராம் சரண் அறிவித்துள்ளார்.

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் இரத்தம், ரணம், ரெளத்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வேற லெவலில் டிரெண்டானது.

இந்நிலையில், நடிகர் ராம் சரணின் இந்த நிதியுதவி பாராட்டுக்களை அள்ளியுள்ளது. நாடு முழுவதும், சும்மா தூங்கிக் கிடக்கும் பல பிரபலங்களும், தொழிலதிபர்களும், இந்த நேரத்தில் மக்களுக்கான சேவைகளை செய்ய முன் வரவேண்டியது மிக மிக முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X