சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்: கற்பூரம்-ஏலக்காய் பொடியை முகர்ந்து பார்க்கும் சல்மான் கான்
ராஜ்கோட்: நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானதையடுத்து அவருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த சல்மான் கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கற்பூரத்தை முகர்ந்து கொண்டிருக்கிறாராம்.
(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)
ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பிரேம் ரத்தன் தன் பாயோ நடித்தில் சல்மான் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். படத்தில் சல்மான் கானின் தங்கையாக ஸ்வரா பாஸ்கர் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டலில் நடந்து வருகிறது.

சோனம்
படப்பிடிப்பில் கலந்து கொண்ட சோனம் கபூருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.

மும்பை
சோனம் கபூரின் தாய் சுனிதா ராஜ்கோட் சென்று தனது மகளை விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வந்து அங்குள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

முன்னெச்சரிக்கை
சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகிவிட்டதையடுத்து பிரேம் ரத்தன் தன் பாயோ படக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

சல்மான்
சல்மான் கான் தனக்கு பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க கற்பூரம், ஏலக்காய் கலந்த பொடியை அவ்வப்போது முகர்ந்து கொண்டிருக்கிறாராம்.

மகாராணி
கொண்டல் அரண்மனை மற்றும் தோட்டத்தில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கொண்டல் மகாராணி குமுத் குமாரி தான் சல்மான் கானை கற்பூரை பொடியை முகர்ந்து பார்க்குமாறு கூறினாராம்.

மாஸ்க்
படக்குழுவினர் அனைவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் வரும்போது மட்டும் மாஸ்கை அகற்றிவிடுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











