பொங்கல் ரிலீஸாகும் வா வாத்தியார்.. எம்ஜிஆர் ஆசி கிடைக்குமா?.. கார்த்தி உருகுறாரே.. நிம்மதி வருமா?

சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பே முடிந்த படம் வா வாத்தியார். இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்கம் நலன் என்பதாலும்; நலனும், கார்த்தியும் முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்தது. ஒருவழியாக பிரச்னை எல்லாம் முடிந்து நாளை படம் ரிலீஸாகவுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் வா வாத்தியார். எப்போதுமே கார்த்தி ஒரு கதையை தேர்ந்தெடுத்தால் அது கண்டிப்பாக பெரும்பாலும் நன்றாக இருக்கும் என்பது திரைத்துறையினரின் கருத்து. அந்தவகையில்தான் அவரும் இதுவரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் அவர் நடித்த மெய்யழகன் படம்கூட பலரால் கொண்டாடப்பட்டது. இந்த தசாப்தத்திலேயே அதுதான் சிறந்த படம் என நடிகர் நானி கூறினார்.

எதிர்பார்க்க வைக்கும் கூட்டணி: புது புது அட்டெம்ப்ட்டுகளாக செய்துகொண்டிருக்கும் கார்த்தி முதன்முறையாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிப்பு வந்தபோதே எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

Ahead of Vaa Vaathiyar Release Karthi Pays Tribute at MGR Memorial
Photo Credit:

பெரிய ரசிகர் பட்டாளம்: நலனின் இயக்கத்துக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். இரண்டுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனவை. அதிலும் காதலும் கடந்து போகும் திரைப்படம் எல்லாம் கல்ட் க்ளாசிக்காக இன்றுவரை ரசிக்கப்படுகிறது. எனவே அவர் படம் எப்போது வெளியானாலும் அதற்கென்று ஒரு மவுசு இருக்கத்தான் செய்யும். ஆனால் வா வாத்தியார் படமே நிறையவே தாமதமாகிவிட்டது.

பொருளாதார பிரச்னைகள்: ஞானவேல் ராஜா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை தயாரித்து கடனாளி ஆகிவிட்டார் என சொல்லப்பட்டது. எனவே அந்த கடனை அடைத்தால்தான் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமை உருவானதால்; பல முறை ரிலீஸ் தேதி சொல்லப்பட்டு அதிலிருந்து விலகி சென்றது. இப்போது ஒருவழியாக நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.

கார்த்தி ட்விட்டர்: மேலும் படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சியும் வந்துவிட்டது. இதன் காரணமாக கார்த்தி - நலனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். நாளை படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுவிட்டதால் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று படக்குழுவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அதுதொடர்பான புகைப்படங்களையும் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவிட்டு; நாளை படம் வெளியாகும் என கூறியுள்ளார்.

எம்ஜிஆர் ரசிகர்: இந்தப் படத்தில் எம்ஜிஆரின் ரசிகராக நடித்திருக்கிறார் கார்த்தி. ட்ரெய்லரில் தோன்றிய ஒவ்வொரு ஃப்ரேமிலும் கார்த்தியின் நடிப்பு தனித்துவமாக இருந்தது. மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்திலேயே எம்ஜிஆர் ரசிகராக ஓரளவு ஸ்கோர் செய்திருப்பார். இப்போது முழு படத்திலும் அதே மாதிரியான ரோல் கிடைத்திருப்பதால் கண்டிப்பாக இதில் கலக்கிவிடுவார் என நம்பப்படுகிறது. அனைத்துக்கும் மேலே நலன் இயக்கத்தில் இத்தனை வருடங்கள் கழித்து ஒரு படம் வருவதும் மகிழ்ச்சியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X