ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல், அஜித்.. ஏஐயை வைத்து கலக்குறாங்க.. செம வீடியோ

சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக டிசம்பர் 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அந்த விழாவில் டாப் ஸ்டார்கள் அனைவரும் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று ரசிகர் ஒருவர் ஏஐயை வைத்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் ஜனநாயகனில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கின்றார்கள். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. இதுதான் விஜய்க்கு கடைசி படம் என்று சொல்லப்படுவதால் இதன் மீது ஓவர் ஹைப் இருக்கிறது.

பகவந்த் கேசரி ரீமேக்: இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து இது தெலுங்கில் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்று அடித்து சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரியவில்லை. அதேசமயம் தளபதி கச்சேரி பாடலில் மமிதா பைஜு போட்டிருந்த காஸ்ட்யூமை வைத்து கண்டிப்பாக இது பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்று ரசிகர்கள் அடித்து கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

AI Video Imagining Rajinikanth Ajith Vijay amp amp Kamal Together at Jana nayagan Event Goes Viral
Photo Credit:

மலேசியாவில் இசை வெளியீட்டு விழா: இது ஒருபக்கம் இருக்க தற்போது தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை அரசியல் களத்தில் கடுமையாக எதிர்த்தும் தாக்கியும் பேசிவருகிறார் விஜய். எனவே படத்துக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் கண்டிப்பாக குடைச்சல் வர வாய்ப்புகள் இருப்பதாக தளபதி ரசிகர்களால் கருதப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் இதன் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கும் என்று சமீபத்தில் அறிவிப்பு வந்தது.

என்ன காரணம்?: மலேசியாவில் நடத்துவதற்கு காரணமே; இங்கு நடத்தினால் தேவையில்லாத சிக்கல்களை ஆளும் தரப்பு கொடுக்கலாம் என்றும், கரூரில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடத்தினால் தேவையில்லாத பேச்சுக்களும், விமர்சனமும் கிளம்பும் என்பதால்தான் மலேசியாவுக்கு படக்குழு ஷிஃப்ட் ஆகிவிட்டார்கள் என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அங்கு நடைபெறும் விழாவை பார்ப்பதற்கு மலேசிய வாழ் தமிழர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேசமயம் டிக்கெட் விலையெல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் டாப் ஸ்டார்கள்: இந்நிலையில் மலேசியாவில் நடக்கும் விழாவில் கோலிவுட் டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சிம்பு,தனுஷ், விக்ரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஏஐயை வைத்து உருவாக்கியிருக்கிறார் ரசிகர் ஒருவர். அந்த வீடியோவில் மேற்கூறிய ஸ்டார்கள் எல்லாம் மலேசியாவில் ஒன்றாக செல்லும்படியும், கேமராவுக்கு போஸ் கொடுக்கும்படியும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த ஏஐ வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X