திருமண வாழ்க்கை வெற்றிபெற ரகசியங்கள் தேவையில்லை... அஜய் தேவ்கன்
மும்பை: சிறந்த திருமணவாழ்க்கை அமைய ரகசியங்கள் ஏதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.
அஜய் தேவ்கன் தனது காதலியும்,சிறந்த நடிகையுமான கஜோலை மணந்து கிட்டதட்ட 15வருடங்கள் ஆகிய நிலையில் இந்த திருமணவாழ்க்கையின் வெற்றிக்கு எந்த ரகசியங்களும் இல்லை என கூறியுள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு நயுசா என்ற மகளும்,யுக் என்ற மகனும் உள்ளனர்.

அழகான மனைவி அன்பான துணைவி:
திருமண வாழ்க்கை குறித்து அஜய்தேவ்கன் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்கையில், ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க முக்கிய காரணம் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதுதான்.

சூத்திரங்கள் தேவையில்லை:
ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு சூத்திரங்கள் ஏதும் இல்லை.உங்கள் துணைக்கு நீங்கள் அளிக்க வேண்டியது முக்கியத்துவமும்,மரியாதையும்தான்" என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு எதிரி அல்ல பாலிவுட்:
மேலும் அவர் பாலிவுட் திருமணபந்தத்திற்கு எதிரானதல்ல.அது ஒவ்வொரு தனிமனித மனவேறுபாட்டைப் பொறுத்தது என்றும் கூறியுள்ளார்.

இரண்டு படங்கள்:
அஜய் தேவ்கன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒன்று பிரபுதேவாவின் "ஆக்சன் ஜாக்சன்" மற்றும் ரோகித் ஷெட்டியின் "சிங்கம்-2".


Click it and Unblock the Notifications











