இந்தி காஞ்சனாவில் மிரட்டப் போவது லாரன்ஸ் இல்லையாம்... அஜய் தேவ்கன் !

மும்பை: காஞ்சனாவின் இந்தி ரீமேக்கில் லாரன்ஸுக்கு பதிலாக அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாரன்ஸ் நடித்த 'முனி' படத்தின் 2-ம் பாகமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'காஞ்சனா'. இப்படத்தை லாரன்ஸ் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு நடித்தும் இருந்தார்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வசூலில் சாதனை...

வசூலில் சாதனை...

கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த திகில் கலந்த நகைச்சுவைப் படமான இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று, வசூல் மழை பொழிந்தது.

இந்தி ரீமேக்...

இந்தி ரீமேக்...

இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியிலும் இப்படத்தை எடுக்க திட்டுமிட்டுள்ளார் லாரன்ஸ்.

முனி -3...

முனி -3...

இந்தி காஞ்சனாவில், தமிழில் நடித்த அதே நடிகர்கள் அனைவரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் லாரன்ஸ் தற்போது முனி -3 படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அவருக்குப் பதில் இவர்...

அவருக்குப் பதில் இவர்...

எனவே, லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் மட்டும் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X