பா*ன் படத்தில்தான் நடிக்க முடியாது.. கஜோலை பக்கத்தில் வெச்சுட்டு அஜய் தேவ்கன் அதிரடி.. செம ஃபன்
மும்பை: பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கன் நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கும் அவர் கடைசியாக De De Pyaar De 2
படத்தில் நடித்தார். படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இந்நிலையில் கஜோலை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேட்டியில் அவர் பேசிய விஷயம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஹிந்தியில் கடந்த 1991ஆம் ஆண்டு Phool Aur Kaante படத்தில் நடித்து தனது ஹீரோ பயணத்தை தொடங்கிய அஜய் தேவ்கனுக்கு பாலிவுட் சிகப்பு கம்பள வரவேற்புதான் கொடுத்தது. முதல் படத்திலேயே அனைவரது கவனத்தை ஈர்த்ததன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றிகளை குவிக்க ஆரம்பித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.
ஒரே வருடத்தில் எட்டு படங்கள்: அவரது மார்க்கெட் அறிமுகமான சில வருடங்களிலேயே உச்சத்துக்கு சென்றதால் ஒரே வருடத்தில் (1993) எட்டு படங்கள்வரை நடித்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி கான் நடிகர்களுக்கு போட்டியாக அவரை ஜொலிக்க வைத்தது. கமர்ஷியல் ரீதியாக மட்டும் வெற்றியை கொடுக்காமல் Zakhm படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

கஜோலுடன் திருமணம்: ஆக்ஷன் ஹீரோ, ரொமான்ட்டிக் ஹீரோ என இரட்டை குதிரையில் பயணம் செய்த அவர் கஜோலுடன் காதலில் விழுந்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். பாலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இன்னமும் வலம் வந்துகொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்த வயதிலும் செம ஆட்டம்: அஜய் தேவ்கனுக்கு இப்போது 56வயது ஆகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் அவர் கடைசியாக நடித்திருந்த தே தே பியார் தே 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் போட்டிருந்த ஆட்டம் இணையத்தில் சென்சேஷனல் ஆனது. இந்த வயதிலும் இப்படி ஒரு ஆட்டமா? ஸ்டெப்ஸ் எல்லாம் விவாகரமாக இருக்கிறதே என்றும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவிட்டியும், நெகட்டிவிட்டியும் சேர்ந்து கமெண்ட்ஸ்கள் பறந்தன.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தனது மனைவி கஜோலுடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது அவர் பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது அந்தப் பேட்டியின் தொகுப்பாளர் அஜய்யிடம், 'உங்களால் எந்த மாதிரியான படங்களில் நடிக்கவே முடியாது' என்று கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல், 'பார்ன் படத்தில்தான் என்னால் நடிக்க முடியாது' என பதிலளித்தார். இதனை கேட்டு அருகில் இருந்த கஜோல் சத்தமாகவே சிரித்துவிட்டார். தற்போது இந்த வீடியோ க்ளிப்பிங்தான் பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











