மாண்புமிகு தமிழக முதல்வர்.. சீக்கிரம் அந்த டைட்டில் போட்டு ஜனநாயகன் ரிலீஸ் பண்ணுங்க - அஜய் ஞானமுத்து!

சென்னை: டிமான்ட்டி காலனி, கோப்ரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர்ன்னு போட்டு சீக்கிரம் ஜன நாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா என ட்வீட் போட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கும் சிஎம் விஜய் வாழ்க என வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். நடிகர் ஜீவா விசில் அடிச்சு கண்ணில் வரும் கண்ணீரை எல்லாம் துடைத்து தனது நண்பனுக்காக வாழ்த்து சொல்லி உள்ளார்.

Ajay Gnanamuthu says please put CM Vijay and Release Jana Nayagan soon

நானி, டைகர் ஷெராஃப், காஜல் அகர்வால், சித்தி இத்னானி, சிபிராஜ், ஜெய், பாடகர் கிருஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மாண்புமிகு முதல்வர் டைட்டில் கார்ட்: "மாண்புமிகு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்னு டைட்டில் கார்டு போட்டு அந்த ஜனநாயகன ரிலீஸ் பண்ணி விடுங்க.. பொங்கலுக்கு மிஸ் ஆன செலிபிரேஷனை இந்த வருஷம் முழுவதும் கொண்டாடி தீர்க்கிறோம் என இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் வாழ்த்து: நடிகர்கள் மட்டுமின்றி நடிகைகளும் விஜய் வெற்றிப் பெற்றதை கொண்டாடி வருகின்றனர். காஜல் அகர்வால், சித்தி இத்னானி உள்ளிட்ட நடிகைகளும் வெளிப்படையாக சிஎம் விஜய்க்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர். ஆந்திராவில் பவன் கல்யாண் துணை முதல்வராகத்தான் ஆனார். தமிழ்நாட்டில் விஜய் முதல்வராகவே மாறப்போகிறார் என கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X