ஹீரோ .. ஹீரோ ..
சென்னை:
எனக்கு அரசியல் தெரி யாது, அது எனக்குத் தேவையுமில்லை என்கிறார் நடிகர் அஜீத்.
9 வேடங்களில் கலக்கவிருக்கும் நடிகர் அஜீத் நடிக்கும் சிட்டிசன் படத்தின் ஷூட்டிங்,சென்னை புறநகரிலுள்ள பழவேற்காடு ஏரிபகுதியில் நடந்து வருகிறது. கடலும், ஏரியும்சங்கமிக்கும் இடம் இது.
ஒரு வாரமாக இந்தப் பகுதியில் ஷூட்டிங்நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமைஷூட்டிங்கின்போது கிடைத்த சின்ன பிரேக்கில் செய்தியாளர்களை அஜீத் சந்தித்தார்.அவர்களுடன் மனம் விட்டுப் பேசினார்.
அப்போது வழக்கமாக எல்லா ஸ்டார்களிடம் கேட்கப்படும் அரசியலுக்கு வருவீர்களாஎன்று கேட்டபோது, எனக்கு அரசியல் தெரி யாது. அதில் ஈடுபட மாட்டேன். அதுஎனக்குத் தேவையுமில்லை.
இப்போது நான் உள்ள நிலைமைக்கு வர ரொம்பக் கஷ்டப்படடுள்ளேன். ரசிகர்கள்மட்டுமே எனது ஆதரவு. வேறு எந்தப் பின்னணியும், ஆதரவும் எனக்கு இல்லை.
எனது ரசிகர்கள் பல கட்சிகளில் இருப்பார்கள். நான் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து,அது அவர்களைப் பாதித்து, அது எனது படங்களின் வெற்றியைப் பாதித்தால், என்னைவைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர்.
எனது ரசிகர் மன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கும். அதைத்தான் நானும்விரும்புகிறேன் என்றார்.
அஜீத்துடன் மீனா, நக்ம, வசுந்தரா தாஸ் உள்ளிட்ட பல ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.கமலஹாசனுக்கு மேக்கப் போட உதவிய மும்பை மேக்கப் மேன்தான்அஜீத்திற்கும்மேக்கப் போடுகிறார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











