ஹீரோ .. ஹீரோ ..
அஜீத் - சிறுகுறிப்புகள்
அல்டிமேட் ஸ்டார் அஜீத்தைப் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில குறிப்புகள் ...
* அஜீத் ஒரு ஆட்டோமொபைல் என்ஜீனியர். என்பீல்ட் கம்பெனியில் 2 வருடம் அப்ரன்டீஸாக இருந்துள்ளார்.
*ரெடிமேட் நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.
*மோட்டார் பைக் ரேஸ் வீரரான அஜீத், மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டு பலமுறை பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.
*திருமணத்திற்கு முன்பு செயின் ஸ்மோக்கர். இப்போது நோ ஸ்மோக்கிங்!.
*விஜயகாந்திற்கு உயிர் நண்பர் இப்ராகிம் ராவுத்தர். அஜீத்தின் நெருங்கிய நண்பர் சுரேஷ் சந்திரா, நக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி.
*முன்கோபம் முன்பு ஜாஸ்தி. இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது.
*தன்னுடைய பட கேரக்டர்கள் குறித்து காதல் மனைவி ஷாலினியுடன் ஆலோசிக்கத் தவறுவதில்லை அஜீத்.
*மனைவியுடன் சேர்ந்து சாட்டிலைட் சானல் துவக்கும் திட்டம் மனதில் இருக்கிறது. காலம் கனியக் காத்திருக்கிறது இந்தக் காதல் ஜோடி.
*அஜீத்தின் குடும்பம் ஒரு சுத்தமான இந்தியக் குடும்பம். அம்மா பெங்காலி, அப்பா மலையாளி. வீட்டில் அஜீத் பேசுவதோ சுத்தமான தமிழ். இது எப்படி இருக்கு?


Click it and Unblock the Notifications











