ஹீரோ .. ஹீரோ ..
சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் நடைபெறவுள்ள தேசிய கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொள்கிறார்.
ஜே.கே. டயர்ஸ் நறுவனமும், மாருதி உத்யோக் நிறுவனமும் இணைந்து இந்த கார்ப் பந்தயத்தை நடத்தவுள்ளன.முதல் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும். கடைசிப் போட்டி டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடத்தைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தேசிய அளவில்முன்னணி வீரர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
நடிகர் அஜீத்தும் இப்போட்டியில் கலந்து கொள்கிறார். அஜீத் பைக் ரேஸ்களில் கலந்து கொண்டு பல போட்டிகளில்வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கார் ரேஸ்களிலும் இவர் முன்பே பங்கேற்றுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications