ஹீரோ .. ஹீரோ ..
சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டையில் நடந்த கார்ப் பந்தயத்தில் நடிகர் அஜீத் கலந்துகொண்டு16-வது இடத்தைப் பிடித்தார்.
அதி வேகத்தில் சென்ற அவரது காரும் பசல் கான் என்பவரது காரும் பக்கவாட்டில் மோதிக் கொண்டன. இதனால்இரு கார்களும் டிராக்கைவிட்டு வெளியே பாயந்தன. இதன் காரணமாக அஜீத்தால் தொடர்ந்து போட்டியில கலந்துகொள்ள முடியவில்லை.
இருங்காட்டுக் கோட்டையில், தேசிய கார்ப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. இதில் அஜீத்தும் கலந்துகொண்டார். சிவப்பு நிற காரை அஜீத் ஓட்டினார்.
மொத்தம் 21 பேர் இதில் கலந்து கொண்டனர். அஜீத்திற்கு 16-வது இடம் தான் கிடைத்தது. போட்டியின் 2-வதுசுற்றிலேயே அஜீத்தின் காரும் பசல் கானின் காரும் மோதிக் கொண்டன. இதனால் போட்டியில் அஜீத்தொடரவில்லை.
போட்டியில் கலந்து கொண்டது குறித்து அஜீத்திடம் கேட்டபோது, ஒரு சேஞ்சுக்காகத்தான் கலந்து கொண்டேன்.ஆனால் கார் பந்தயங்களில் எனக்கு ரொம்பவே ஆர்வம் உண்டு.
கார் பந்த வீரர் அயர்டன் சென்னா தான் எனது ஹீரோ. ஆனால் நம்ம ஊரிலேயே நரேன் கார்த்திகேயன் என்றஹீரோ இப்போ வந்து விட்டார். இது ஒரு சாதனை என்றார் அஜீத்.
அஜீத்துடன், அவரது மனைவி ஷாலினி, மச்சினி ஷாமிலி ஆகியோரும் வந்திருந்து அஜீத்தை உற்சாகப்படுத்தினர்.
மீண்டும் கார் ரேஸில் அஜீத்


Click it and Unblock the Notifications











