அஜீத் படம்-வதந்திகளை நம்பவேண்டாம்: விஷ்ணு வர்த்தன்
பில்லா 2 படத்திற்கு பின்னர் தல அஜீத் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளி வந்து அஜித்துக்கும், விஷ்ணுவர்தனுக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தந்தது. எதிர்பாராத காரணங்களினால் பில்லா 2 படத்தை இயக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அஜீத்- விஷ்ணுவர்த்தன் ஜோடி மீண்டும் இணைகிறது.
புதிய படத்தின் கதாநாயகியாக அமலாபால், அனுஷ்கா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்று படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.
படம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அஜீத் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர் தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் தீர்மானிக்கப்படும் அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் துவங்கும்.
அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம்." என்றார். மேலும் இந்த படத்தில் வித்தியாசமான தலையை பார்க்க இருக்கிறீர்கள் என்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் சந்தோசம் கொடுத்திருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.


Click it and Unblock the Notifications
